பப்பா ராவல்
இராணுவ வாழ்க்கைசில புராணக்கதைகளின்படி, பாப்பா ராவல் புகழ்பெற்ற அரேபியர்களிடமிருந்து கைப்பற்றினார்.[2] ரமேஷ் சந்திர மஜும்தார், ஆர்.வி. சோமானி போன்ற வரலாற்று அறிஞர்கள், அரேபிய படையெடுப்பாளர்கள் சித்தூரின் முன்னாள் ஆட்சியாளர்களை தோற்கடித்தனர். பின்னர் அரேபிய படையெடுப்பாளர்களை சித்தோர்கார் கோட்டையிலிருந்து விரட்டியடித்த பப்பா ராவல் சித்தூரின் கட்டுப்பாட்டைப் பெற்றார். மஜும்தாரின் கூற்றுப்படி, பொ.ஊ. 725ல் அரேபியர்கள் வடமேற்கு இந்தியா மீது படையெடுத்தபோது, மோரி இராசபுத்திர குலத்தினர் சித்தூரில் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அரேபியர்கள் மோரிகளை தோற்கடித்தனர். பின்னர் அரேபியர்கள் பாப்பா ராவல் அடங்கிய கூட்டமைப்பால் தோற்கடிக்கப்பட்டனர்.[3][4] மஜும்தார் அரேபியர்களுக்கு எதிரான அவரது வீரம் பாப்பா ராவலின் மதிப்பை உயர்த்தியதாக நம்புகிறார். கூர்ஜர-பிரதிகார வம்ச மன்னர் நாகபட்டர் உருவாக்கிய அரபு-எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒரு பகுதியாக பாப்பா ராவல் இருந்ததாக ஆர்.வி. சோமானி கருதினார். இராஷ்டிரகூடர் படையெடுப்புகளுக்கு எதிராக பாப்பா ராவல், பிரதிஹாரா தரப்பில் போராடியிருக்கலாம் என்றும் சோமானி ஊகிக்கிறார். லக்னோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சியாம் மனோகர் மிஸ்ரா, பப்பா ராவல் முதலில் மோரி ஆட்சியாளர் மனுராஜாவின் (மான் மௌரியா) அடிமையாக இருந்ததாகக் கருதினார். அரேபியர்களுக்கு எதிரான போரை பப்பா ராவல் வழிநடத்தியிருக்கலாம். இந்த எதிர்ப்பு போர் மன்னரை விட பப்பா ராவலை மிகவும் பிரபலமாக்கியது. பின்னர், அவர் மனுராஜாவை (மான் மௌரியா) பதவி நீக்கம் செய்தார், அல்லது மனுராஜா குழந்தை இல்லாமல் இறந்த பிறகு பப்பா ராவல் அரசரானார்.[5] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia