சித்தோர்கார் கோட்டை
7ஆம் நூற்றாண்டு முதல் சூரிய குல இராசபுத்திர குகிலோத்தி மன்னர்களாலும், பின்னர் சிசோதியா குல மன்னர்களால், 1567இல் அக்பர் சித்தூர் கோட்டை கைப்பற்றும் வரை ஆளப்பட்டது. 180 மீட்டர் உயரத்தில், 280 ஹெக்டர் பரப்பளவில், மலைப்பாங்கான இடத்தில் சித்தூர் கோட்டை அமைந்துள்ளது. [1]இதனடியில் பெரோச் ஆறு பாய்கிறது. இக்கோட்டையினுள் அரண்மனைகள், கோயில்கள், கோபுரங்கள், வாயில்கள் அமைந்துள்ளது. சித்தூர் கோட்டை இராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.[2][3][4] சித்தூர் கோட்டை பல முறை குஜராத் சுல்தானகம், தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயர்களால் கைப்பற்றப்பட்ட்டது. இக்கோட்டை எதிரிகளால் கைப்பற்றும் நிலையில் இருக்கும் போது, கோட்டையில் உள்ள இராசபுத்திரப் பெண்களும், அரண்மனை மகளிரும், எதிரிகளின் கையில் சிக்கிச் சீரழியாத வகையில் கூட்டுத் தீக்குளிப்பு விழா நடத்தி தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. சித்தூர் கோட்டையை கி பி 1303இல் அலாவுதீன் கில்சி, மேவார் மன்னர் ராணா ரத்தன் சிங்கை வென்று கைப்பற்றினான். 1535இல் குஜராத் சுல்தான் பகதூர் ஷா விக்கிரம் சித் சிங்கை வென்று கைப்பற்றினான். கி பி 1567இல் அக்பர், மகாராணா இரண்டாம் உதய்சிங்கை வென்று சித்தூர் கோட்டை கைப்பற்றினான். சித்தூர் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் போரில் 1303இல் ராணி பத்மினியும், 1507இல் ராணி கர்ணாவதியும் உயிர் துறந்தனர்.[2][3][5] இராஜஸ்தான் மாநிலத்தின் ஐந்து கோட்டைகளுடன் சித்தூர் கோட்டையும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கே நிறுவனம் 2013இல் அறிவித்தது. அமைவிடம்இராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் பகுதியில் சித்தோகார் மாவட்டத்தின் தலைநகரான சித்தோர்கார் நகரத்தில் சித்தூர் கோட்டை அமைந்துள்ளது. தில்லி - மும்பை நெடுஞ்சாலையில், அஜ்மீர் நகரத்திலிருந்து 233 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்கள் 76 மற்றும் 79 சித்தூர் கோட்டை வழியாக செல்கிறது. பண்பாடுசித்தூர் கோட்டையும், சித்தூர் நகரமும் இராசபுத்திரர்களின் பெரும் விழா எனப்படும் கூட்டுத் தீக்குளிப்பு விழாவிற்கு பெயர் பெற்றது.[6] இராஜஸ்தான் மாநிலத்தின் ஆறு மலைக் கோட்டைகளான ஆம்பர் கோட்டை, சித்தூர் கோட்டை, காக்ரோன் கோட்டை, ஜெய்சல்மேர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை மற்றும் ரந்தம்பூர் கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கே நிறுவனம் 2013இல் அறிவித்தது.[7][8] படக்காசியகம்
இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia