பயண ஆவணப்படம்பயண ஆவணம் (Travel documentary) என்பது பயணத்தின்போது எடுக்கப்படும் திரைத்தொடராகவோ, திரைப்படமாகவோ இருக்கும். இதில் பயணத்தின்போது கண்ட சுற்றுலாத் தலங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கும். மைக்கேல் பாலின் என்பவர் பல இடங்களுக்கு பயணித்து, அந்த இடங்களைப் பற்றிய தகவல்களை திரைத் தொடராக படமெடுத்துள்ளார். வரலாறுபயணக் குறும்படம்சுற்றுலா செல்லவிருக்கும் பயணிகளுக்கு பிற இடங்களைப் பற்றிய காணொளிகள் காண்பிக்கப்படுவது உண்டு. இது எண்பது நிமிடங்கள் நீளம் கொண்டதாக இருக்கும். வேற்று நாடுகளைப் பற்றியும், அவற்றின் சிறந்த சுற்றுலாத் தலங்களைப் பற்றியும், அங்கே காணத்தக்க அம்சங்களைப் பற்றியும் காணொளியில் காண்பிக்கப்படும்.[1] இவற்றில் காண்பிக்கப்படும் இடங்களைப் பற்றி, யாரேனும் ஒருவர் தகவல்களை சொல்லிக் கொண்டிருப்பார். சுற்றுலாப் பயணிகளை கவரவும், சுற்றுலா இடங்களைப் பார்வையிட மக்களை தூண்டவும் இத்தகைய காணொளிகள் காண்பிக்கப்படும். குறிப்பிடத்தக்க பயண ஆவணங்கள்தொலைக்காட்சிகள்பயணம், சுற்றுலா தொடர்பான திரைத்தொடர்களும், திரைப்படங்களும் தொலைக்காட்சிகளிளும் ஒளிபரப்பப்படுகின்றன. அத்தகைய தொலைகாட்சிகளில் சில:
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia