கலைத் திரைப்படம்கலைத் திரைப்படம் (Art film) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். இது பொதுவாக ஒரு சுதந்திர திரைப்படமாகும். இந்த வகை பார்வையாளர்களைக் கவரும் நோக்குடன் சந்தைபடப்படுகின்றது.[1] திரைப்படத்தில் வரும் கதையின் தத்ரூபக் காட்சியமைப்புகள், எளிதில் புரிந்து கொள்ள இயலாத திரைக்கதை வடிவமைப்பு போன்ற பல நோக்கங்களைக் கொண்டு எடுக்கப்படுவதே கலைப்படம் எனப்படும். கலைப்படம் வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட உண்மைச் சம்பவங்களினையும், கதைகளினையும் இயக்குனரின் கலைப் பார்வையுடன் கேளிக்கை பார்வையற்று முற்றிலும் தத்ரூபமாக அமைக்கப்படுவதென்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியத் திரைப்படங்கள் மற்றும் பிரெஞ்சுத் திரைப்படங்கள் பெரும்பாலும் கலைப்பட நயத்துடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. திரைப்பட விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆய்வுகள் அறிஞர்கள் பொதுவாக ஒரு கலைத் திரைப்படம் "பிரதான ஹாலிவுட் படங்களிலிருந்து வேறுபட்டதாகக் குறிக்கும் முறையான குணங்களைக் கொண்டது" என்று வரையறுத்து சொல்லப்படுகின்றது.[2][3] பிரபல கலைப்படங்கள்பிரபல கலைப்பட இயக்குநர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia