பரக்பூர்
பரக்பூர் (Barrackpore, or Barrackpur), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில் பரக்பூர் நகரம் உள்ளது. பெயர் காரணம்பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரர்களின் முதல் பாசறையாகவும், போர் பயிற்சி புரியும் இடமாக இருந்ததால், இவ்விடத்திற்கு பரக்பூர் எனப் பெயராயிற்று. வரலாறு1772ல் பரக்பூர், இந்தியாவில் கம்பெனி ஆட்சி காலத்தில், முதலாவது ஆங்கிலேய போர்ப்படைவீரர்களின் பயிற்சி கூடமாகவும், குடியிருப்பு நகரமாகவும் இருந்தது. மேலும் பரக்பூர் நகரம், இந்தியத் தலைமை ஆளுநரின் வாழ்விடம் மற்றும் அலுவலமாக விளங்கியது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு சிப்பாய்க் கிளர்ச்சிகளில் முதன்மையான, 1824ல் சிப்பாய் பிண்டி திவாரி தலைமையில் நடைபெற்ற பரக்பூர் பரக்பூர் சிப்பாய் கிளர்ச்சி நடைபெற்றது.[2] முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் போது, கடல் கடந்து கப்பல்களில் பர்மாவிற்கு செல்வது என்பது தங்களின் சமூக வழக்கத்திற்கு எதிரானது எனக்கூறி கப்பலில் ஏற மறுத்து கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி செய்த இந்த இந்து சிப்பாய்களை, ஆங்கிலேயப் படைவீரர்கள் பீரங்கிகளால் தாக்கிக் கொன்றனர்.[3]1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது பரக்பூரில் இந்து மற்றும் இசுலாமிய சிப்பாய்கள், மங்கள் பாண்டே தலைமையில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பரக்பூர் நகர மக்கள்தொகை 1,52,783 ஆகும். அதில் ஆண்கள் 78,349 (51%), பெண்கள் 74,434 (49%) ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11,786 ஆக உள்ளனர். எழுத்தறிவு 1,25,144 (88.76%) ஆகவுள்ளது.[5] பரக்பூர் நகரத்தில் வங்காள மொழி பேசும் இந்துக்கள் 85.76%, இசுலாமியர்கள் 13.37% மற்றும் பிற சமயத்தவரகள் 0.86% ஆகவுள்ளனர்.[6] பொருளாதாரம்தொழில்கள்இந்தியத் தரைப்படை மற்றும் விமானப்படைவீரர்களின் பாசறைகள் பரக்பூர் நகரத்தில் உள்ளது. மேலும் வேளாண்மை, மீன் பிடி தொழில், தோட்டக்கலைத் தொழில்கள் வளர்ச்சியடைந்துள்ளது. கொல்கத்தா பெருமாநகராட்சியின் வலாயத்தில் பரக்பூர் நகராட்சி அமைந்துள்ளது.[7][8] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia