பரசினிக்கடவு
பரசினிக்கடவு (Parassinkkadavu) ⓘ என்பது அந்தூர் நகராட்சியில் உள்ள ஒரு சிறிய கோயில் நகரமாகும். இந்த நகரம் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூர் நகரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது வடக்கு மலபாரிலுள்ளா ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஈர்ப்புகள்இந்த ஊர் புகழ்பெற்ற முத்தப்பன் கோயிலுக்கு புகழ்பெற்றது. [1][2] கேரளாவில் தெய்யம் என்ற நடனம் தினசரி நடத்தப்படும் ஒரே இந்து கோயில் இதுதான் பாரம்பரிய வருடாந்திர விழாவான உத்சவம் என்பது "தையில்" குலத்தை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர் தலைமையில் கண்ணூர் குடும்ப வீட்டிலிருந்து ஊர்வலமாகத் தொடங்கி இந்த ஆலயத்தில் முத்தப்பன் ஆலயத்தில் முடிகிறது. இறுதியில் பிரதான பலிபீடத்தில் கடவுளுக்கு ஒரு பூசை (பிரார்த்தனை) நடைபெறுகிறது. பர்சினிக்கடவு பாம்பு பூங்காவிற்கு இந்த ஊர் குறிப்பிடத்தக்கது. இராச நாகம் உள்ளிட்ட சுமார் 150 வகையான பாம்பினங்கள் பூங்காவில் வாழ்கின்றன. பாம்புகளிலிருந்து விஷத்தை பிரித்தெடுப்பதற்கான ஆராய்ச்சி மையம்ம் இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் பைத்தான்கள் உள்ளிட்ட விஷமற்ற பாம்புகளின் பெரிய தொகுப்பும் உள்ளது. விஸ்மயா என்ற கேளிக்கைப் பூங்காவும் இங்கு அமைந்துள்ளது புகைப்படத் தொகுப்பு
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்External links![]() விக்கிப்பயணத்தில் பரசினிக்கடவு என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia