பரித்துதின் கஞ்ச்சகர்
குவாஜா பரீத்துதின் மசூத் கஞ்ச்சகர் (Khwaja Farīduddīn Mas'ūd Ganjshakar, 1173-1266) பஞ்சாபிய சூபி துறவியும் முஸ்லிம் சமயவியலாளரும் ஆவார்.[1] ![]() பரீத் கஞ்ச் சகர் பஞ்சாபி மொழியின் முதல் கவிஞராக கருதப்படுகின்றார். தவிரவும் பஞ்சாப் பகுதியின் ஐந்து பெருந்துறவியரில் ஒருவராக கருதப்படுகின்றார். முஸ்லிம்களாலும் இந்துக்களாலும் சமமாக மதிக்கப்படும் பாபா பரீத் சீக்கியர்களின் பதினைந்து பகத்துகளில் ஒருவராகவும் கருதப்படுகின்றார். இவரது படைப்புகளிலிருந்து சில பகுதிகள் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பில் இடம் பெற்றுள்ளன. இவரது தர்கா தற்போதைய பாக்கித்தானிய பஞ்சாபிலுள்ள பாக்பத்தானில் உள்ளது. இது 1267இல் கட்டப்பட்டது.[1] இங்கு ஒவ்வொரு ஆண்டும் இசுலாமிய மாதமான முகரத்தின் போது சிறப்பு விழா நடைபெறுகின்றது; பல நாடுகளிலிருந்தும் அப்போது யாத்திரிகர்கள் வருகை தருகின்றனர். மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia