குரு கிரந்த் சாகிப்
குரு கிரந்த் சாகிப் (Guru Granth Sahib) என்பது சீக்கியர்களின் புனித நூலாகும். சீக்கியர்களுக்கான கடைசி வார்த்தைகளான இது[3] 1430 அங்கங்கள் (பக்கங்கள்) கொண்ட பெரிய நூலாகும். இந்நூலானது பொ.ஊ. 1469 முதல் 1708 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த சீக்கிய குருமார்களால் எழுதித் தொகுக்கப்பட்டது.[3] அது இறைப் பாடல்கள் அல்லது ஷபதுகளின் ஒரு தொகுப்பாகும். அவை கடவுளின் பண்புகளையும் [4] கடவுளின் பெயரை ஏன் தியானிக்க வேண்டும் என்பதையும் விவரிக்கிறது. ஆதி கிரந்தம் எனப்படும் முதல் பதிப்பானது, ஐந்தாவது குருவான குரு அர்ஜன் (1564–1606) அவர்களால் தொகுக்கப்பட்டது. இதன் தொகுப்பு ஆகஸ்ட் 29, 1604 அன்று நிறைவடைந்து. செப்டம்பர் 1, 1604 அன்று அமிருதசரசில் உள்ள பொற்கோயிலுக்குள் முதன்முதலில் நிறுவப்பட்டது.[5] பொற்கோயிலின் முதல் கிரந்தியாக பாபா புத்தர் நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு குரு அர்கோவிந்த் ராம்கலி கி வார் என்ற பாடலை அதில் சேர்த்தார். பின்னர், பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங், ஆதி கிரந்ததில் குரு தேக் பகதூரின் பாடல்களைச் சேர்த்து, அந்த உரையை தனது வாரிசாக உறுதிப்படுத்தினார்.[6] இந்த இரண்டாவது பாடல் குரு கிரந்த் சாகிப் என்று அறியப்பட்டது. மேலும் சில நேரங்களில் ஆதி கிரந்த் என்றும் குறிப்பிடப்படுகிறது.[7] அமைப்புஇந்த உரையில் 1,430 பக்கங்கள் மற்றும் 5,894 பாடல் வரிகள் உள்ளன. இவை கவிதை ரீதியாக மொழிபெயர்க்கப்பட்டு, தாள ரீதியாக அமைக்கப்பட்ட பண்டைய வட இந்திய பாரம்பரிய இசை வடிவத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டன.[8] வேதத்தின் பெரும்பகுதி 31 முக்கிய ராகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கிரந்த ராகமும் நீளம் மற்றும் ஆசிரியரைப் பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது. வேதத்தில் உள்ள பாடல்கள் முதன்மையாக அவை படிக்கப்படும் இராகங்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.[9] குரு கிரந்த் சாகிப் பஞ்சாபி, லஹந்தா, பிராந்திய பிராகிருதங்கள், அபபிரம்சம், சமசுகிருதம், இந்தி மொழிகள் (பிராச் மொழி, அரியான்வி, அவதி, பழைய இந்தி), போச்புரி, சிந்தி மராத்தி, மார்வாரி, பெங்காலி, பாரசீகம் மற்றும் அரபு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் குர்முகி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த மொழிகளில் உள்ள பிரதிகள் பெரும்பாலும் சந்த் பாஷா என்ற பொதுவான தலைப்பைக் கொண்டுள்ளன. இயற்றியவர்கள்குரு கிரந்த் சாகிப் முக்கியமாக ஆறு சீக்கிய குருக்களால் இயற்றப்பட்டது: குரு நானக், குரு அங்கது தேவ், குரு அமர் தாஸ், குரு ராம் தாஸ், குரு அர்ஜன் மற்றும் குரு தேக் பகதூர். இது இராமாநந்தர், கபீர் மற்றும் நாமதேவர் போன்ற பதினான்கு இந்து பக்தி இயக்க துறவிகள் மற்றும் ஒரு முஸ்லிம் சூபி துறவி பரித்துதின் கஞ்ச்சகர் ஆகியோரின் மரபுகள் மற்றும் போதனைகளையும் கொண்டுள்ளது.[10][11] நம்பிக்கைகுரு கிரந்த் சாகிப்பின் பார்வை, தெய்வீக சுதந்திரம், கருணை, அன்பு, ஒரே கடவுள் நம்பிக்கை மற்றும் எந்த விதமான ஒடுக்குமுறையும் இல்லாத நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தைப் பற்றியது.[12][13] இந்த கிரந்தம் இந்து மதம் மற்றும் இஸ்லாத்தின் புனித நூல்களை ஒப்புக்கொண்டு மதிக்கிறது என்றாலும், இந்த எந்த மதங்களுடனும் தார்மீக சமரசத்தையும் அது குறிக்கவில்லை.[14] இது ஒரு சீக்கிய குருத்துவாராவில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு சீக்கியர் பொதுவாக அத்தகைய கோவிலுக்குள் நுழையும் போது அதன் முன் மண்டியிட்டு வணங்குவார்.[15] கிரந்தம் சீக்கிய மதத்தில் நித்திய குர்பானியாகவும் ஆன்மீக அதிகாரமாகவும் போற்றப்படுகிறது..[16] வரலாறு![]() கிரந்தத்தின் பாடல்களை குரு நானக் இயற்றினார். அவை அவரது ஆதரவாளர்களால் இராகத்தில் இசைக்கப்பட்டன.[17] அவருக்குப் பின்வந்த குரு அங்கது தேவ், மையங்களைத் திறந்து இந்த பாடல்களை விநியோகித்தார். சமூகம் பாடல்களைப் பாடும். அவரது முகவர்கள் நன்கொடைகளை சேகரித்தனர்.[18] இந்த பாரம்பரியத்தை மூன்றாவது மற்றும் நான்காவது குருக்களும் தொடர்ந்தனர். சீக்கிய மதத்தின் நான்காவது குருவான குரு ராம் தாஸின் மூத்த மகனும், ஐந்தாவது குருவான குரு அர்ஜனின் மூத்த சகோதரரும், சீக்கிய குரு பதவியைப் பெற விரும்பியவருமான பிருதி சந்த், பாடல்கள் கொண்ட முந்தைய போதி (எழுத்தோலை) நகலை வைத்திருந்தார். மேலும், முந்தைய குருக்களின் பாடல்களையும் தனது சொந்த பாடல்களுடன் விநியோகித்து வந்தார்.[19] குரு அர்ஜன் இவற்றை போலியானவை என்று கருதி, அங்கீகரிக்கப்பட்ட பாடல்களின் உண்மையான தொகுப்பை நிறுவுவதில் அக்கறை காட்டினார்.[20] இதனையும் காண்ககுறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: குரு கிரந்த் சாகிப் |
Portal di Ensiklopedia Dunia