பழவேற்காடு
வரலாறுவிசய நகர மன்னர்களின் துணையுடன் போர்த்துக்கீசியர்கள் 1502-ஆம் ஆண்டில் இங்கு ஓர் வணிகப் புறமையத்தை நிறுவினார்கள். பின்னர் இங்கு கோட்டை ஒன்று கட்டிக்கொண்டு இருந்தனர் 1609-ஆம் ஆண்டில் ஒல்லாந்தரிடம் தோற்று இந்தக் கோட்டையை இழந்தனர். பழவேற்காடு 1609 முதல் 1690 வரை ஒல்லாந்தரிடம் இருந்தது. அதன்பிறகு கோட்டை அடிக்கடி கைமாறியது. இறுதியாக 1825 முதல் பிரித்தானியர்களின் கைவசமானது. இங்குள்ள டச்சு தேவாலயம் பலமுறை சீரமைக்கபட்டும் இன்று அழிபட்ட நிலையில் உள்ளது டச்சுக் கோட்டையும் இடுபாடுகளுடன் உள்ளது. பழைய கலங்கரைவிளக்கத்தை இன்னும் ஏரியின் மறுகரையில் பார்க்கலாம். இங்குள்ள 1622-ஆம் ஆண்டு கல்லறை தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. வன காப்பகம்பழவேற்காடு பழவேற்காடு பறவைகள் காப்பகத்தினுள் அமைந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச்சு வரை இங்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia