பழுப்பு நிலக்கரிபழுப்பு நிலக்கரி அல்லது லிக்னைட் (Lignite or brown coal), 25% முதல் 35% வரையில் கரிமம் கொண்ட மிருதுவான, பழப்பு நிறத்தில் காணப்படும் ஒரு வகை எரிபொருள் ஆகும்.[1][2]பழுப்பு நிலக்கரியில் ஈரப்பதம் அதிக அளவில் இருப்பதாலும், கரிமம் குறைந்த அளவில் இருப்பதாலும் வெப்பம் தரும் ஆற்றலில் இது நிலக்கரி அடுத்த தரத்தில் இது உள்ளது.[3] எனவே சரங்கங்களில் தோண்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி, நீராவி மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுகிறது.[4] பயன்பாடுகள்பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி நீராவி மின்சார நிலையங்கள் இயங்குகிறது, சிறிதளவில் வேளாண்மைக் கருவிகள் உற்பத்திக்கும் மற்றும் நகைகள் உருக்குவதற்கும் பயன்படுகிறது. மேலும் பழுப்பு நிலகக்ரி குளிர்கால பிரதேசங்களில் வீடுகளில் வெப்பமூட்டி அடுப்புகளில் பயன்படுகிறது. இந்தியாவில் பழுப்பு நிலக்கரிஇந்தியாவில் ஆந்த்ரசைட், பிட்மினஸ், பழுப்பு நிலக்கரி, பீட் ஆகிய நான்கு வகைகள் கிடைக்கிறது. இவற்றில் மிக உயர்ந்த தரத்தில், வெப்ப ஆற்றலை தரக்கூடியது ஆந்த்ரசைட் மற்றும் பிட்மினஸ் எனும் நிலக்கரி ஆகும். இவை இரண்டிலுமே கரிமத்தின் அளவு அதிகம். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைபுகள்
|
Portal di Ensiklopedia Dunia