பாடகசாலை
பாடகசாலை (Padagasalai) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஜெ. தமிழ் இயக்கிய இப்படத்தில் சத்யா, அரவிந்த், ஆர்.சஞ்சய், இனியா, பிரீத்தி புஷ்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் சிசர் மனோகர், போண்டா மணி, ராஜா சேது முரளி, சூலூர் சண்முகதேவன், சிவானந்தம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். டி. அனில் தயாரித்த இப்படத்திற்கு, ஹிடேஷின் இசை அமைத்துள்ளார் . படமானது 2010 மார்ச் 26 அன்று வெளியானது.[1] நடிகர்கள்
தயாரிப்புதேவவிஜயம் பிலிம் மேக்கர்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடகசாலை படத்தின் மூலம் ஜே. தமிழ் இயக்குநராக அறிமுகமானார். மேலும் அவர் ஒளிப்பதிவையும் மேற்கொண்டார். புதுமுகங்களான சத்யா, அரவிந்த், ஆர். சஞ்சய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். கேரளத்தைச் சேர்ந்த இனியா ஸ்ருதி என்ற பெயரில் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் நாயகிகளில் ஒருவராக நடிக்க பிரீத்தி புஷ்பன் நடித்தார். இப்படத்திற்கு இதேஷ் இசை இசையமைக்க, தளபதி தினேஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, முருகராம் படத்தொகுப்பை செய்தார்.[2][3][4][5] இசைதிரைப்பட பினண்ணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் இடேஷ் அமைத்தார். இந்த படத்தின் இசைப்பதிவில் உடுமலை கரிசல் முத்து, பி. கே. சிவசிறீ, கோவை முஸ்தபா ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு பாடல்கள் உள்ளன. பாடல்களானது 18 பிப்ரவரி 2010 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பிரசன்னா, கலைப்புலி ஜி. சேகரன், வி. சி. குகநாதன், பி. எல். தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.[6] தி இந்துவின் எஸ். ஆர். அசோக் குமார் இந்த பாடல் தொகுப்பை "கடந்து செல்லக்கூடியது" என்று குறிப்பிட்டார்.[7]
வெளியீடுஇந்த படம் 26 மார்ச் 2010 அன்று வசந்தபாலனின் அங்காடி தெரு வெளியான சமயத்தில் வெளியானது.[8] வணிகம்இந்த படம் சென்னை மண்டலத்தில் சராசரிக்கும் குறைவான தொடக்க வசூலை ஈட்டியது.[9] வணிக ரீதியாக மோசமான வசூலையே ஈட்டியது. மேலும் திரைப்படத் தயாரிப்பாளர் டி. அனில் ஒரு புதிய பதாகையின் கீழ் ஆர்வம் (2010) என்ற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.[10] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia