பிரியதர்ஷினி

Priyadarshini
பின்னணித் தகவல்கள்
பிறப்புசென்னை, தமிழ் நாடு, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், கருநாடக இசைபாடகி
தொழில்(கள்)பாடகர், பின்னணிப் பாடகர், இசை ஆராய்ச்சியாளர்.[1]

பிரியதர்ஷினி சிங்கப்பூர்-இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை ஆராய்ச்சியாளர் ஆவார்.  பரத்வாஜ் இசையமைப்பில் “காதல் டாட் காம்” படத்தில் இடம்பெற்ற “காதல் காதல்” என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். இப்பாடலை இவர் பின்னணிப் பாடகர் ஹரிஹரனுடன் இணைந்து பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் பல ஹிட் பாடல்கள் பாடி தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துள்ளார். பிரியதர்ஷினி ஸ்டார் விஜய் உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளையும்  தொகுத்து வழங்கியுள்ளார்.[2][3]

பிறப்பு மற்றும் கல்வி

பிரியதர்ஷினி, ராம் மற்றும் சுமதி தம்பதியருக்கு மகளாக சென்னையில் பிறந்தவர். பிரியதர்ஷினி 5ம் வகுப்பு வரை தோகா, கத்தாரில் படித்த பிறகு, சிங்கப்பூரில் தொடர்ந்து நார்த்லேண்ட் தொடக்கப்பள்ளி, யிஷுன் மேல்நிலைப்பள்ளி மற்றும் யிஷுன் ஜூனியர் கல்லூரிகளில் 12ம் வகுப்பு வரை படித்தார்.பின்னர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் மின்னணு பொறியியல் (Electrical & Electronics Engineering) பொறியியல் படிப்பை முடித்தார். பிரியதர்ஷினி சிறு வயதிலிருந்தே பாட்டுத்திறன் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று பின்பு ஹிந்துஸ்தானி இசையையும் பயின்றிருக்கிறார். அஸோஸியேட் ராயல் ஸ்கூல் ஒப் மியூசிக், லண்டனில்  மேற்கத்திய இசைக்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.[4]

தொழில்

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்த 'காதல் டாட் காம்' தமிழ் படத்திற்காக பிரபல பின்னணிப் பாடகர் ஹரிஹரனுடன் ஒரு டூயட் பாடும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து ‘குஸ்தி’, சிவாஜி கணேசனின் மகன் பிரபு நடிப்பிற்கு வெற்றியைப் தந்த படத்திற்காக டி.இமான்  இசையமைப்பில் பிரியதர்ஷினிக்கு பாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்  நந்தி, நேர்முகம், வின், கிரி, சிம்ம பலுடு , மாணிக்கம் 420 என பல படங்களில் பாடியுள்ளார்.[5] கன்னட சினிமாவில் ராஜேஷ் ராம்நாத் இசையமைப்பில் உருவான "அஜ்ஜு" படம் மூலம் கன்னட மொழி படங்களில் அறிமுகமானார். பிரியதர்ஷினி பிரபல கன்னடத் திரைப்பட நடிகர் யஷ் நடித்த "ராக்கி" படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் திரு எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் டூயட் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

செலுவின சித்தாரா, ஜூலி, நன்னெதெய ஹாடு, சீனா, ப்ரீத்தியிந்தா ரமேஷ் உள்ளிட்ட 110 க்கும் மேற்பட்ட படங்களில் பல மொழிகளில் பாடியுள்ளார்.   பிரியதர்ஷினி, பரத்வாஜ், ஹம்சலேகா, மனோ மூர்த்தி, குருகிரண், டி.இமான், ராஜேஷ் ராம்நாத், ஆர்.பி. பட்நாயக், கே.கல்யாண், எஸ்.ஏ.ராஜ்குமார், வெங்கட், கணேஷ் நாராயண், எம்.என்.க்ருபாகர், மஹேஷ் மஹாதேவ்,  ஏ.டி.ரவீஷ், சி.ஆர்.பாபி மற்றும் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் இவர் பாடிய  “நான் தான் பாலா” தமிழ்த் திரைப்படத்தின் ஆடியோவை ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.[6] பிரியதர்ஷினி 200 க்கும் மேற்பட்ட ஆல்பங்களுக்கும் 50 க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களையும் பாடியுள்ளார். தற்போது மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்திய திரைப்பட இசையில் பி எச்.டி ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். திரைப்பட இசையில் பி.எச்.டி ஆராய்ச்சி மேற்கொண்ட முதல் இந்திய பின்னணிப் பாடகர் என்ற பெருமை இவரை சாரும்.[1][7][8]

டிஸ்கோகிராபி

திரைப்படப் பாடல்கள்

ஆண்டு திரைப்படம் மொழி பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் இசையமைப்பாளர் குறிப்புகள்
2003 காதல் டாட் காம் தமிழ் காதல் காதல் ஹரிஹரன் பழனி பாரதி பரத்வாஜ்
2004 அஜ்ஜு கன்னடம் ஈ பிரேமதாரம்ப ராஜேஷ் கிருஷ்ணன் வி. நாகேந்திர பிரசாத் ராஜேஷ் ராமநாத்
2004 கிரி தெலுங்கு பொம்மனவாரி கார்த்திக் டி.இமான்
2005 நியூஸ் கன்னடம் கிர கிர கே.கே கவி ராஜ் குருகிரண்
2006 குஸ்தி தமிழ் மசாலா மகாராணி ரஞ்சித் பா.விஜய் டி.இமான்
2006 ஜூலி கன்னடம் ஈ ஹாடு கே.கல்யாண் ராஜேஷ் ராமநாத்
2007 ஜூலி கன்னடம் நவநீத சோரா கே.சி.ன் மோகன் ராஜேஷ் ராமநாத்
2007 மாணிக்கம் 420 தெலுங்கு சின்ன பகுலுன்ன படவா புவன சந்திரா பரத்வாஜ்
2007 ஹெத்தரே ஹென்னண்ணே ஹெரபேக்கு கன்னடம் நன்நிந்தா நீனென்து சேத்தன் சொஸ்கா ஜெயந்த் கைகிணி மனோ மூர்த்தி
2007 செலுவின சித்தாரா கன்னடம் கென்டௌளே கணே ஸ்.நாராயண் மனோ மூர்த்தி
2007 செலுவின சித்தாரா கன்னடம் பை டூ காபி சேத்தன் சொஸ்கா, ஸ்டிபன் பிரவீன் ஸ்.நாராயண் மனோ மூர்த்தி
2008 பிட்டா கன்னடம் முன்ஜானே நீ ஹேமந்த் குமார் பஞ்சஜன்யா வெங்கட்-நாராயண்
2008 மூரனே கிளாஸ் மன்ஜா பி.காம் பாக்யா கன்னடம் உசிரே நீ மாதநாடே கேஷவ் பிரசாத் பஞ்சஜன்யா வெங்கட்-நாராயண்
2008 ரம்யா ரக்ஷிதா கன்னடம் அம்பரவில்லதே வேணு ஏ.டி.ரவீஷ்
2008 ரம்யா ரக்ஷிதா கன்னடம் சுவ்வாலி சுவ்வாலி ஸ்ரீஹரி வேணு ஏ.டி.ரவீஷ்
2008 ரம்யா ரக்ஷிதா கன்னடம் பிரணயத மாத்து அஜய் வாரியர் ஏ.டி.ரவீஷ் ஏ.டி.ரவீஷ்
2008 ஹாப்பி நியூ இயர் கன்னடம் நீனேனா நீனேனா ராஜேஷ் கிருஷ்ணன் ஸ்ரீதர் ஷங்கர் ஏ.டி.ரவீஷ்
2008 சிக்கமங்களூர சிக்க மல்லிகே கன்னடம் ஓ வசுந்தரா சின்மயி ஆத்ரேயஸ் கே.கல்யாண் கே.கல்யாண்
2008 செல்லாடத ஹுடுகரு கன்னடம் மனசே மனசே சேத்தன் சொஸ்கா ராமநாராயண் ஏ.டி.ரவீஷ்
2008 ராக்கி கன்னடம் ஸ்நேகத சிகுரு ஸ்.பி. பாலசுப்ரமணியம் பஞ்சஜன்யா வெங்கட்-நாராயண்
2009 நிருதியோகி கன்னடம் தானே தானே ராஜேஷ் கிருஷ்ணன் ஸ்ரீதர் ஷங்கர் ஏ.டி.ரவீஷ்
2009 நிருதியோகி கன்னடம் ரங்கீன ரங்கோலி அஜய் வாரியர் ஸ்ரீதர் ஷங்கர் ஏ.டி.ரவீஷ்
2009 நன்நெதெய ஹாடு கன்னடம் ஹீகேகோ காணே ராஜேஷ் கிருஷ்ணன் வேணு ஏ.டி.ரவீஷ்
2009 சீனா கன்னடம் கண்ணல்லே காடோது பசவராஜ் பெல்லாரி ஏ.டி.ரவீஷ்
2009 அதிருஷ்டா கன்னடம் நிலவே நிலவே அனூப் சந்திரா எம்.என்.க்ருபாகர் எம்.என்.க்ருபாகர்
2010 திப்பாரள்ளி தரலேகளு கன்னடம் ச்சம் ச்சம் ஹேமந்த் குமார் சஜ்ஜன் எம்.என்.க்ருபாகர்
2010 ப்ரீதியிந்தா ரமேஷ் கன்னடம் சம்திங் சம்திங் ராஜேஷ் கிருஷ்ணன் கே.கல்யாண் ஏ.டி.ரவீஷ்
2010 எக்கா கன்னடம் தேலி மனசு தேலி பி.சோமேஷ் எம்.என்.க்ருபாகர்
2010 எக்கா கன்னடம் ஹாருஷக்கே ஹுட்டுன்டு நாகநாத் பி ஜோஷி எம்.என்.க்ருபாகர்
2010 ஜெயஹே கன்னடம் செலுவே நீனு எம்.என்.க்ருபாகர் திரில்லர் மஞ்சு எம்.என்.க்ருபாகர்
2011 நந்தி தமிழ் மயங்கினேன் மயங்கினேன் முகேஷ் ந. முத்து விஜயன் பரத்வாஜ்
2011 ஸ்ரீ நாகசக்தி கன்னடம் பாரம்மா ஓலிது பத்ரி பிரசாத் கோடூரி கணேஷ் நாராயண்
2011 சங்கரன்கோவில் தமிழ் புலி வருது முகேஷ் சினேகன் ரஜனி
2012 சிம்ம பலுடு தெலுங்கு ச்சல்ங்கா ராமு ஆதி ஷியாம் மணிசர்மா
2012 சிம்ம பலுடு தெலுங்கு நீ கண்ணுல மல்லிகார்ஜுன ஆதி ஷியாம் மணிசர்மா
2012 ஹாய் கிருஷ்ணா கன்னடம் ரோமாஞ்சன வேணு ஏ.டி.ரவீஷ்
2012 ஹாய் கிருஷ்ணா கன்னடம் மிஞ்சாகி பானின்தா நவீன் ஸ்ரீதர் ஷங்கர் ஏ.டி.ரவீஷ்
2013 நீநன்த்ரே இஷ்ட கனோ கன்னடம் இஷ்ட கனோ சேத்தன் சொஸ்கா ஸ்ரீதர் ஷங்கர் சக்ரி
2014 24 காரட் கன்னடம் ஹீகேதகே ஸ்ரீதர் ஷங்கர் ஏ.டி.ரவீஷ்
2014 நான் தான் பாலா தமிழ் உயிரே உனக்காக ஸ்ரீனிவாஸ் நா.முத்துக்குமார் வெங்கட் க்ரிஷி
2014 நான் தான் பாலா தமிழ் திருவாய் மொழி அழகா வாலி வெங்கட் க்ரிஷி
2014 வின் தமிழ் காதல் தேவதையே வி.வி.பிரசன்னா யு.கே.முரளி யு.கே.முரளி
2015 முத்தின மளேயலி கன்னடம் நீ ஓலவினா சந்தோஷ் வென்கி உமா ஷங்கர் ஏ.டி.ரவீஷ்
2015 முத்தின மளேயலி கன்னடம் ஏனு ஹெளு மெல்லனே அவினாஷ் செப்பி மஞ்சு சாகர் ஏ.டி.ரவீஷ்
2016 நேர்முகம் தமிழ் கண்ணுக்கு மை தான் முரளிகிருஷ்ணா முரளிகிருஷ்ணா
2019 ஜான்சி.ஐ.பி.ஸ் கன்னடம் அனுராகத அலேயலி மஹேஷ் மஹாதேவ் எம்.என்.க்ருபாகர்

திரைப்படம் அல்லாத பாடல்கள்

ஆண்டு ஆல்பம் மொழி பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் இசையமைப்பாளர் ரெகார்ட் லேபிள்
2005 சக்தி முருகன் தமிழ் வா முருகா வா எஸ்.பாலன் சுந்தரம் சரண் சாரதி
2005 சக்தி முருகன் தமிழ் ஷிவா பாலனே எஸ்.பாலன் சுந்தரம் சரண் சாரதி
2006 கானா மஸ்தி இந்தி தில் தே தில் தே பிபின் குமார் சரண் சரதி சரண் சாரதி
2007 கிருஷ்ண கானம் தமிழ் ஹரி கோவிந்தா அனந்த் சேகர் சேகர். எஸ்
2007 சாய்ச ங்கீதம் தமிழ் நாதாந்த நாதா காதல்மதி கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச ங்கீதம் தமிழ் சாய் பாபா பகவான் நாமம் காதல்மதி கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச ங்கீதம் தமிழ் சாய் சுப்ரபாதம் காதல்மதி கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச ங்கீதம் தமிழ் புத்தம் புது ஓலி காதல்மதி கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச ங்கீதம் தமிழ் நந்தலாலா காதல்மதி கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச ங்கீதம் தமிழ் வில்லை ஏந்தும் காதல்மதி கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச ங்கீதம் தமிழ் மாய கண்ணனோ காதல்மதி கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் கன்னடம் கண்ணீரிணிந்த பாதவ கே.கல்யாண் கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் கன்னடம் நந்தலாலா கே.கல்யாண் கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் கன்னடம் சத்ய சாய் கே.கல்யாண் கே.கல்யாண் கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் கன்னடம் ஜெய் ஜெய் சாய் கே.கல்யாண் கே.கல்யாண் கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் கன்னடம் மொடநதல்லி பெள்ளிய கே.கல்யாண் கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் கன்னடம் பங்கார பேடா கே.கல்யாண் கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் கன்னடம் கள்ள க்ரிஷ்ணனா கே.கல்யாண் கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் கன்னடம் ராமனாகி பந்தே கே.கல்யாண் கே.கல்யாண் கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் தெலுங்கு ப்ரம்மானமந்தா புவன சந்திரா கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் தெலுங்கு நீ தொடுண்டே புவன சந்திரா கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் தெலுங்கு துவாராக வாசா புவன சந்திரா கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் தெலுங்கு ஷரனன்னே வாரிணி புவன சந்திரா கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் தெலுங்கு நந்தலாலா புவன சந்திரா கே.கல்யாண் லஹாரி
2007 சாய்ச சங்கீத் தெலுங்கு ராமுடை வச்சினாவு கே.கல்யாண் புவன சந்திரா கே.கல்யாண் லஹாரி
2008 மத்துரா மதுரா கன்னடம் ஆறுமுக உரை புவன சந்திரா லஹாரி
2008 மத்துரா மதுரா கன்னடம் மதுராபுர பாவனகோளிசி நவீன் ராய் ஏ.டி.ரவீஷ் லஹாரி
2008 மத்துரா மதுரா கன்னடம் பாஹி பாஹி ஜெகமோகன கிருஷ்ணா நாராயண தீர்த்தர் ஏ.டி.ரவீஷ் லஹாரி
2008 மத்துரா மதுரா கன்னடம் தேவகி நந்தா நந்த முகுந்தா நவீன் ராய், சுமதி ராம் ஏ.டி.ரவீஷ் லஹாரி
2008 மத்துரா மதுரா சமசுகிருதம் த்வாமேவ சரணம் அன்னமாச்சாரியார் ஏ.டி.ரவீஷ் லஹாரி
2008 மத்துரா மதுரா சமசுகிருதம் சமுதித மதனே ஜெயதேவ அஷ்டபதி ஏ.டி.ரவீஷ் லஹாரி
2008 மத்துரா மதுரா கன்னடம் யாதவ நீ பா புரந்தரதாசர் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2008 மத்துரா மதுரா கன்னடம் தில்லானா மதுரை எல் கிருஷ்ணன் லதா ராம்சந்த் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2008 மத்துரா மதுரா கன்னடம் லாலி நவீன் ராய் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம பிரியா சமசுகிருதம் ஓம் ராமபத்ராய சம்பிரதாய பாடல் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம பிரியா சமசுகிருதம் அதரம் மதுரம் சம்பிரதாய பாடல் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம பிரியா கன்னடம் சைத்ரா ஷுக்லா நவீன் ராய் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம பிரியா சமசுகிருதம் ஷுத்த ப்ரம்ம சம்பிரதாய பாடல் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம பிரியா சமசுகிருதம் ப்ரசன்னாங்க ராகம் ஸ்.பி பாலசுப்ரமணியம் சம்பிரதாய பாடல் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம பிரியா கன்னடம் ஆரத்தி நவீன் ராய் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம பிரியா சமசுகிருதம் வந்தே சந்தம் சம்பிரதாய பாடல் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம் பியாரி இந்தி சைத்ரா ஷுக்லா நவீன் ராய் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம் பியாரி இந்தி ஆரத்தி நவீன் ராய் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம் பியாரி இந்தி பிரேம முதித சம்பிரதாய பாடல் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2009 ராம் பியாரி இந்தி ராமா கஹோ சம்பிரதாய பாடல் ஏ.டி.ரவீஷ் ஆர்ட் ஆப் லிவிங் / யுனிவர்சல் மியூசிக்
2016 மோடகா பிரியா கணராஜா சமசுகிருதம் மூஷிக வாஹனா மஹேஷ் மஹாதேவ் சாம்பிரதாய பாடல் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 மோடகா பிரியா கணராஜா சமசுகிருதம் முதகராத்த மோதகம் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 மோடகா பிரியா கணராஜா சமசுகிருதம் மஹாகணபதிம் முத்துசுவாமி தீட்சிதர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 மோடகா பிரியா கணராஜா சமசுகிருதம் ப்ரணம்ய ஷிரசா தேவம் சாம்பிரதாய பாடல் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 மோடகா பிரியா கணராஜா சமசுகிருதம் கைலாச ஷிகரவரே சாம்பிரதாய பாடல் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 மஹாருத்ரம் மஹாதேஷ்வரம் சமசுகிருதம் ஸ்ரீ மஹாதேஷ்வர சுப்ரபாதம் மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 மஹாருத்ரம் மஹாதேஷ்வரம் சமசுகிருதம் ஓம்கார ப்ரணவ மந்த்ர ஸ்வரூபம் மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 மஹாருத்ரம் மஹாதேஷ்வரம் சமசுகிருதம் ஸ்ரீ மஹாதேஷ்வர பஞ்சரத்னம் மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 மஹாருத்ரம் மஹாதேஷ்வரம் சமசுகிருதம் ஸ்ரீ மஹாதேஷ்வர அஷ்டாதச நாமாவளி மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 மஹாருத்ரம் மஹாதேஷ்வரம் சமசுகிருதம் ஸ்ரீ மஹாதேஷ்வர லாலி மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா சமசுகிருதம் கணேஷ பஞ்சரத்னம் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா சமசுகிருதம் ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னம் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா சமசுகிருதம் ஸ்ரீ சிவா பஞ்சரத்ன ஸ்தோத்ரம் மஹேஷ் மஹாதேவ் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா சமசுகிருதம் ஸ்ரீ சாரதா புஜங்கம் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா சமசுகிருதம் ஸ்ரீ ஹனுமான் பஞ்சரத்னம் மஹேஷ் மஹாதேவ் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா சமசுகிருதம் நாராயண ஸ்தோத்ரம் மஹேஷ் மஹாதேவ் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா சமசுகிருதம் காலபைரவாஷ்டகம் மஹேஷ் மஹாதேவ் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2016 ஸ்ரீ சங்கர ஸ்தோத்ர ரத்னா சமசுகிருதம் அச்யுதாஷ்டகம் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2017 தேவி ராக தாள லய மாலிகா சமசுகிருதம் தேவி தயாலினி பவமோசனி மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2017 தாசாம்ருதா கன்னடம் பேக பாரோ நீல மேக வர்ண பாரோ மஹேஷ் மஹாதேவ் வாதிராஜ தீர்த்தர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2017 சகல பலம்புலு நீவே தெலுங்கு சகல பலம்புலு நீவே சர்வேஸ்வரா அன்னமாச்சாரியார் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2017 ஹரிஹர சுதன் தமிழ் ஹரிஹர சுதனே சரணம் மஹேஷ் மஹாதேவ் அகத்தியர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2018 ஐயப்பன் சரண கோஷம் தமிழ் கடலலையாம் பக்தர் கூட்டம் மஹேஷ் மஹாதேவ் சுமதி ராம் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2018 மஹாலக்ஷ்மி பாரம்மா கன்னடம் மஹாலக்ஷ்மி பாரம்மா மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ்மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் ம்யுகஸ் ரேகார்ட்ஸ்
2018 மஹாலக்ஷ்மி தாயே வா தமிழ் பொன் மழை தனிலே மஹேஷ் மஹாதேவ் ஜி.கிருஷ்ணகுமார் மஹேஷ் மஹாதேவ் ம்யுகஸ் ரேகார்ட்ஸ்
2019 சாவன் கே பாதல் இந்தி நீலே ககன் மென் அபிஷேக் சோகானி மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 கஜல் உருது ஜிந்தகி பர் தந்தர் கி கஞ்சர் சலே மஹ் ஜபீன் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 நாரேயண நாமாம்ருதம் தெலுங்கு ஸ்ரீ நாரேயண நாமாம்ருதம் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 நாரேயண நாமாம்ருதம் தெலுங்கு திமி திமி தண தண மஹேஷ் மஹாதேவ் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 நாரேயண நாமாம்ருதம் கன்னடம் நானேனு பல்லேனோ கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 நாரேயண நாமாம்ருதம் தெலுங்கு ராம ராம முகுந்த மஹேஷ் மஹாதேவ் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 நாரேயண நாமாம்ருதம் கன்னடம் ஈ தேஹதொளகித்து கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 நாரேயண நாமாம்ருதம் கன்னடம் மங்களம் அமர நாரேயணகே மஹேஷ் மஹாதேவ் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 சத்குரு ஸ்ரீ யோகி தெலுங்கு நருடு குருடனி நம்மே வாரமு ஸ்.பி பாலசுப்ரமணியம் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 சத்குரு ஸ்ரீ யோகி கன்னடம் ஆத்ம த்யானிஸோ மனுஜ கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 சத்குரு ஸ்ரீ யோகி தெலுங்கு அண்டஜ வாகன குண்டலி சயன மஹேஷ் மஹாதேவ் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 சத்குரு ஸ்ரீ யோகி கன்னடம் இல்லி நீ நிவாஸ மாடிருவுதேனோ கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 சத்குரு ஸ்ரீ யோகி கன்னடம் கண்டெனு ஸ்ரீ ரங்கநாதனா ஸ்.பி பாலசுப்ரமணியம் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 சத்குரு ஸ்ரீ யோகி தெலுங்கு ஏகாக்ஷரமே ப்ரஹ்மாக்ஷரமாய் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 சத்குரு ஸ்ரீ யோகி தெலுங்கு மங்களம் சதகோடி மன்மதா காருனகு மஹேஷ் மஹாதேவ் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2019 வன்புலி வாகன சபரீஷா தமிழ் வருவாய் விரைவாய் மஹேஷ் மஹாதேவ் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2020 கைவார யோகி (சிங்கிள்) தெலுங்கு திமி திமி பேரிநௌபத்து ஸ்.பி பாலசுப்ரமணியம், மஹேஷ் மஹாதேவ் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2020 நமோ வெங்கடேஷாய தெலுங்கு நருடு குருடனி ஸ்.பி பாலசுப்ரமணியம் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2020 சிவா ஸ்தோத்ரம் சமசுகிருதம் நாகேந்திர ஹாராய மஹேஷ் மஹாதேவ் ஆதி சங்கரர் மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்
2020 டிவைன் கலெக்ஷன்ஸ் அப் ஸ்ரீ ராமா தெலுங்கு ராம ராம முகுந்த மஹேஷ் மஹாதேவ் கைவாரா ஸ்ரீ யோகி நாரேயணா மஹேஷ் மஹாதேவ் பி. ம் ஆடியோஸ்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 https://archive.org/details/saamagana-indian-classical-music-magazine-july-2018/page/12/mode/2up?q=Priyadarshini
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-02. Retrieved 2021-05-09.
  3. https://www.deccanherald.com/content/70077/all-ears-melodious-nostalgic-numbers.html
  4. Music is her world – Deccan Herald – Internet Edition. Archive.deccanherald.com (2006-01-29). Retrieved on 2017-10-24.
  5. http://archive.deccanherald.com/Deccanherald/Jan292006/enter1030202006128.asp
  6. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-naan-thaan-bala-story-and-songs-that-impress/article5590134.ece
  7. https://www.imdb.com/name/nm11862946/
  8. https://itunes.apple.com/by/artist/priyadarshini/107059786
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya