பானு பிரதாப் சிங் வர்மா
பானு பிரதாப் சிங் வர்மா (Bhanu Pratap Singh Verma) (பிறப்பு: சூலை 15, 1957) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் நடப்பு இணை அமைச்சரும் ஆவார் . இவர் 1996 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்று தற்போது ஜலான் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் உத்தரபிரதேசத்தின் கோரி சமூகத்தைச் சேர்ந்தவர். [1] 1996, 1998, 2004, 2014, 2019 பொதுத் தேர்தல்களில் ஜலான் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.[2] [3] ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்பானு பிரதாப் சிங், உத்தரபிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான கோஞ்சில் சுமர் வர்மா மற்றும் சுமித்ரா வர்மா தம்பதியின் மகளாகப் பிறந்தார். பானு பிரதாப் முதுகலை மற்றும் இளங்கலைச் சட்டப் படிப்பை முடித்துள்ளார். பிப்ரவரி 17, 1972 இல் இராம் மூர்த்தி வர்மா என்பவரை மணந்தார். தற்போது உத்தரபிரதேச மாநிலம் கோஞ்சில் வசித்து வருகிறார். சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia