பான்ஸ்வாரா சமஸ்தானம் (Banswara State ) பிரித்தானிய இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த பான்ஸ்வாரா இராச்சியம் 4160 சதுர மைல் பரப்பளவுடன் இருந்தது. பான்ஸ்வாரா இராச்சியம் 1527ஆம் ஆண்டில் சிசோடியா வம்ச இராஜபுத்திர குலத்தினர் நிறுவினர்.[ 1] 1900-ஆம் வரை முடியாட்சியாக விளங்கிய பான்ஸ்வாரா இராச்சியம், 1895-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பான்ஸ்வாரா இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது . இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.
வரலாறு
இராஜபுத்திர மன்னர் ராணா சங்கா , 1527-இல் முகலாய மன்னர் பாரை எதிர்த்து கன்வா போரில் போரிட்டார். போரில் இறந்த ராணா சங்காவின் இராச்சியம், பான்ஸ்வாரா இராச்சியம் மற்றும் துங்கர்பூர் இராச்சியம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பான்ஸ்வாரா இராச்சியம் 1527-இல் ஜெகால் சிங்கிடம் ஒப்டைக்கப்பட்டது.[ 2] [ 3] இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. [ 4]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Pochhammer, Wilhelm von India's Road to Nationhood: A Political History of the Subcontinent (1973) ch 57 excerpt
Copland, Ian (2002), Princes of India in the Endgame of Empire, 1917-1947 , (Cambridge Studies in Indian History & Society). Cambridge and London: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் . Pp. 316, ISBN 0521894360 .
Harrington, Jack (2010), Sir John Malcolm and the Creation of British India, Chs. 4 & 5. , New York: Palgrave Macmillan ., ISBN 978-0-230-10885-1
Imperial Gazetteer of India vol. II (1908), The Indian Empire, Historical , Published under the authority of His Majesty's Secretary of State for India in Council , Oxford at the Clarendon Press. Pp. xxxv, 1 map, 573.
Imperial Gazetteer of India vol. III (1907), The Indian Empire, Economic (Chapter X: Famine, pp. 475–502 , Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxxvi, 1 map, 520.
Imperial Gazetteer of India vol. IV (1907), The Indian Empire, Administrative , Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552.
Ramusack, Barbara (2004), The Indian Princes and their States (The New Cambridge History of India) , Cambridge and London: Cambridge University Press. Pp. 324, ISBN 0521039894
வெளி இணைப்புகள்
↑ Princely States of India
↑ "Dungarpur ". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 8 . (1911). Cambridge University Press. 679–680.
↑ Dungarpur Britannica.com .
↑ History of Banswara