பாப்பம்மாள்
பாப்பம்மாள் (Pappammal) ( 1914 - 27 செப்டம்பர் 2024[1]) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை உழவர் ஆவார்.[2] தனது 105 வயது வரை, வயலில் சுறுசுறுப்பாக இயங்கிய வயதான விவசாயி.[3] வேளாண் துறையில் முன்னோடியாகக் கருதப்பட்ட இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்வித் துறையுடன் இணைந்திருந்தார். இவர் தனது 105 வயதிலும், 2.5 ஏக்கர் நிலத்தில் ஒவ்வொரு நாளும் வேலை செய்தார்.[4] இயற்கை வேளாண்மையில் ஆற்றிய பங்களிப்புக்காக இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதினை 2021ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கி இந்திய அரசு பெருமைப்படுத்தியது.[5][6][7] மார்ச் 2021இல் கோயம்புத்தூருக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 105 வயதான பாப்பாம்மாள் பாட்டியைச் சந்தித்து ஆசி பெற்றார்.[8] இவருக்கு திமுக சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது.[1] தனிப்பட்ட வாழ்க்கைஎம். பாப்பம்மாள் அல்லது ரங்கம்மாள் 1914 ஆம் ஆண்டில் தேவலபுரம் கிராமத்தில் செங்குந்தர் மரபில் நெசவு பாரம்பரிய தொழில் செய்யும் குடும்பத்தில் வேலம்மாள் மற்றும் மருதாச்சல முதலியார் ஆகியோருக்குப் பிறந்தார். இளம் வயதில் இவர் பெற்றோரை இழந்தார். இவரும் இவருடைய இரண்டு சகோதரிகளும் கோயம்புத்தூரில் உள்ள தேக்கம்பட்டியில் தங்கள் தந்தைவழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டனர். தனது பாட்டி நடத்தி வந்த கடையை வாரிசு என்ற முறையில் உரிமையாக்கிக் கொண்டு ஒரு உணவகத்தைத் திறந்தார்.[9] இந்தத் தொழிலிலிருருந்து இவர் பெற்ற இலாபத்திலிருந்து, கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இவர் தன் சகோதரியின் குழந்தைகளையும் வளர்த்தார்.[2] இவர் காலை 5:30 மணிக்கு தனது நாளைத் தொடங்கி, காலை 6 மணிக்கு தனது பண்ணைக்குச் சென்றார். அங்கு இவர் மதியம் வரை வேலை செய்தார். இவருடைய குடும்ப உறுப்பினர்கள் இவருடைய உணவுப் பழக்கம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை தான் இவரை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகக் கூறினர். இவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, இவருக்குப் பிடித்த உணவு ஆட்டிறைச்சி பிரியாணி ஆகும். இவர் தனது உணவில் நிறைய காய்கறிகளையும் கீரைகளையும் சாப்பிட்டார். இவர் உணவை இலையில் சூடாக சாப்பிட்டார். எந்த தட்டுகளையும் பயன்படுத்த மாட்டார். இவர் தேநீர் அல்லது காபி சாப்பிடாமல், சூடான நீரைக் குடித்தார்.[10] அரசியல் வாழ்க்கை1959ஆம் ஆண்டில்,இவர் தேக்கம்பட்டி ஊராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினராக இருந்தார். காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் கவுன்சிலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][11] இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) உறுப்பினராகவும், மு. கருணாநிதியின் தீவிர ரசிகராகவும் இருந்தார்.[2] மறைவு109 வயதாகும் பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் தனது சொந்த ஊரில் 27 செப்டம்பர் 2024 அன்று மறைந்தார்.[12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia