பாற்சுரப்பி
பாற்சுரப்பி அல்லது பாலூட்டிச் சுரப்பி (mammary gland) பெண்னினப் பாலூட்டிகளில் தனது இளம் சேய்களுக்கு கொடுப்பதற்கான பாலைச் சுரக்கும் உறுப்பாகும். மனிதர்களில் இந்தச் சுரப்பிகள் மங்கையரின் கொங்கைகளில் அமைந்துள்ளன. பசு, ஆடு, மான் போன்ற அசையிடும் விலங்கினங்களில் பாலூட்டிச் சுரப்பிகள் பால்மடிகளில் உள்ளன. உயர்திணை இனங்களல்லாத நாய், பூனை போன்ற பாலூட்டிகளில் பாற்சுரப்பிகள் சில நேரங்களில் டக்சு எனப்படுகின்றன. கட்டமைப்புமுழுமையாக வளர்ந்த பாற்சுரப்பியின் அடிப்படை கூறுகளாக சிற்றறைகளைச் (சில மில்லிமீட்டரே அளவுள்ள காலியிட துளைகள்) அடுத்த பால் சுரக்கும் கனசதுர கலங்களும் இவற்றைச் சூழ்ந்துள்ள தசைமேல் தோலிழைம அணுக்களும் ஆகும். இந்தச் சிற்றறைகள் இணைந்து லோபூல்கள் எனப்படும் முனைகள் ஆகின்றன. ஒவ்வொரு லோபூலிலிருந்தும் பாலேந்து நாளங்கள் கிளம்பி முலைக்காம்பில் முடிகின்றன. தசைமேல் தோலிழைம அணுக்கள் ஆக்சிடாசினின் தூண்டுதலில் சுருங்க, சிற்றறையில் சுரக்கப்படும் பால் முலைக்கொம்பிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சேய் சப்பும்போது ஆக்சிடாசின் தாக்கத்தில் "கைவிடு மறிவினை" நிகழ்கின்றது; சேயின் வாயில் தாயின் பால் சுரக்கப்படுகின்றது — நாளத்திலிருந்து உறிஞ்சப்படுவதில்லை . ஒரு பாலேந்து நாளத்திற்கு வருகின்ற அனைத்து பால் சுரக்கும் திசுக்களும் "எளிய பாற்சுரப்பி" எனப்படுகின்றன; அனைத்து எளிய பாற்சுரப்பிகளும் ஒரு முலைக்காம்பிற்கு வழங்குவதை "சிக்கலான பாற்சுரப்பி" என்கிறோம். மனிதர்களுக்கு பொதுவாக ஒவ்வொரு கொங்கையிலும் ஒன்றாக இரண்டு சிக்கலான பாற்சுரப்பிகள் உள்ளன. மனிதர்களின் சிக்கலான பாற்சுரப்பிகளில் 10 முதல் 20 வரையிலான எளிய பாற்சுரப்பிகள் உள்ளன. இரண்டு முலைக்காம்புகளுக்கு மேலாக இருப்பவை பாலிதெலியா என்றும் இரண்டு சிக்கலான பாற்சுரப்பிகளுக்கு மேலுள்ளவை பாலிமாசுத்தியா என்றும் குறிக்கப்படுகின்றன. பாலேந்து நாளங்களின் மரவடிவ (வேர்.தண்டு,கிளைகள்) உள்ளமைப்பை சரியாக வைத்திருக்க மற்றொரு இன்றியமையா கூறு தேவைப்படுகின்றது – பாற்சுரப்பி தோல் மேற்புறக் கலங்களின் வெளிப்பொருள் அணி (ECM). இதுவும் கொழுப்பினித்திசுக்கள், நார்முன் கலங்கள், அழற்சிக் கலங்கள், மற்றும் பிறவும் பாற்சுரப்பி இழையவலையை உருவாக்குகின்றன.[4] பாற்சுரப்பி தோல் மேற்புறக் கலங்களின் வெளிப்பொருள் அணி முதன்மையாக மேற்புறக் கலங்களாலான அடித்தள சவ்வையும் இணையிழையத்தையும் கொண்டுள்ளது. இவை பாற்சுரப்பிக்கான அடிப்படை வடிவத்தை தாங்குவதோடு உறுப்பின் பல்வேறு கட்ட வளர்ச்சியின்போது பாற்சுரப்பி தோல் மேற்புறத்திற்கும் உள், வெளி சூழலுக்கும் பாலமாக அமைகின்றது.[5][6] இழையவியல்![]() பாற்சுரப்பிகள் ஓர் குறிப்பிட்ட வகை அப்போக்கிரைன் சுரப்பியாகும்; இவை சேய் பிறப்பின்போது சீம்பால் உற்பத்தி செய்வதற்கான திறனுடையவை. பாற்சுரப்பிகள் "தலைவெட்டு" சுரத்தல் பண்பைக் கொண்டிருத்தலால் அப்போக்கிரைன் சுரப்பிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. பல நூல்கள் பாற்சுரப்பிகளை மாற்றப்பட்ட வியர்வை நாளங்களாக குறிப்பிடுகின்றன.[7][8][9] இருப்பினும் சில அறிஞர்கள் இதனை ஏற்பதில்லை; மாற்றாக இவை கொழுப்புச் சுரப்பிகள் என வாதிடுகின்றனர்.[7] படத் தொகுப்பு
மேற்சான்றுகள்
நூற்றொகை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia