பாலையம்பட்டி
பாலையம்பட்டி அல்லது "பாளையம்பட்டி" என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். [1] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 123.12 மீ. உயரத்தில், (9°32′13″N 78°05′59″E / 9.5370°N 78.0996°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பாலையம்பட்டி அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பாலையம்பட்டி ஊரின் மொத்த மக்கள்தொகை 18,576 பேர் ஆகும்.[2] அரண்மனை மண்டபம்இராமநாதபுரம் சமசுதானத்திலிருந்த 14 ஜமீன்களில் ஒன்றான பாலையம்பட்டி ஜமீன் (முன்பு ஒரு பாளையத்திற்குத் தலைமையிடமாக இப்பகுதி இருந்ததால் பாளையம்பட்டி என்று அழைக்கப்பட்டது) அரண்மனை மண்டபம் ஒன்றைக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பல ஆண்டுகளாக இந்த அரண்மனை மண்டபம் சிதிலமடைந்து இருந்ததால், சுமார் ரூ.2 கோடி செலவில் இப்போது புனரமைக்கப்பட்டு பழமை மாறாமல் உள்ளது.[3] சமயம்இந்துக் கோயில்தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் ஆயிர வைசிய காசுக்கார செட்டி நீராவி விசுவநாத சுவாமி கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று பாலையம்பட்டி ஊரில் அமைந்துள்ளது.[4] அரசியல்பாலையம்பட்டி பகுதியானது, அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, விருதுநகர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia