பால் கிரக்மேன்
பால் கிரக்மேன் (Paul Krugman, பிறப்பு: பெப்ரவரி 28, 1953) அமெரிக்க பொருளியல் நிபுணரும், ஆசிரியரும், பத்தி எழுத்தாளரும், அறிஞரும் ஆவார். இவர் 2008 ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் நினைவு பரிசு பெற்றவராவார். புது வணிக தேற்றத்தில் இவருடைய பங்களிப்புக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் & பன்னாட்டு இயல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார், 2000 லிருந்து வாரமிருமுறை தி நியுயார்க் டைம்ஸ் நாளிதழில் பத்தி எழுதி வருகிறார். வாழ்க்கை வரலாறுயேல் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology)யில் முனைவர் பட்டமும் பெற்றவர். 1999-ம் ஆண்டு முதல் நியூயார்க் டைம்ஸ் இதழில் பொருளாதார கட்டுரைகளை எழுதிவருகிறார். ஸ்டான்போர்ட், எம்.ஐ.டி., லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் பொருளாதார பாடம் எடுத்துள்ளார். 20 புத்தகங்கள், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.[1] ஆதாரங்கள்
இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia