பிங்கல நிகண்டு

பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.[1] இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன, அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது. மேலும் 1091 சொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன.

அகத்தியம் என்னும் நூலழிந்து தொல்காப்பியம் நிலை பெற்றது போல், ஆதி திவாகரத்தின் அடியாய்ப் பிறந்தது இந்நூல். காலத்தில் முந்தைய இந்நூல், நிகண்டுகளுள் கடைசியாக அச்சிடப்பட்ட நிகண்டாகும். திவாகர நிகண்டைக் காட்டிலும் பல சொற்கள் கொண்டது இந்நூல்.[2]

நூல் அமைப்பு

நிகண்டு நூல்களில் பழமையதான திவாகர நிகண்டு சொற்களை இக்கால அகராதி போல அகர வரிசையில் அடுக்கிக்கொண்டு பொருள் கூறுகிறது. இந்த நிகண்டு ஒன்றுவிட்ட அடுத்த எழுத்தான எதுகை அடிப்படையில் சொற்களை அடுக்கிக்கொண்டு சொல்லின் பொருளை விளக்குகின்றது.

மேற்கோள்கள்

  1. திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு, செந்தமிழ்ப் பிரசுரம் – வெளியீடு – எண் 54, சு. வையாபுரிப்பிள்ளை பதிப்பு, அச்சகம் – மதுரைத் தமிழ்ச் சங்கம் முத்திராசாலை அச்சகம், 1931
  2. சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya