பிநாகம்பிநாகம் என்பது சிவபெருமானுடைய வில்லின் பெயராகும். இதனால் சிவபெருமான் பிநாகபாணி என்று வழங்கப்பெறுகிறார். [1] இவ்வில்லானது திரிபுர சம்ஹாரத்தில் மேருமலையை வில்லாக வளைத்து மாற்றியதாக நம்பப்படுகிறது. தொன்மக் கதைகன்வ முனிவர் தவம்கன்வ முனிவர் என்பவர் பிரம்மாவை நோக்கி தவமிருந்தார். அவருடைய தவக்காலத்தில் அவர்மீது புற்றும், புற்றின் மீது மூங்கில் செடியும் வளர்ந்தன. கன்வ முனிவரின் தவபயனால் பிரம்மா முனிவரின் தவத்தினை ஏற்று வரம் தந்தார். விற்களின் தோற்றம்முனிவரின் தவக் காலத்தில் வளர்ந்த மூங்கிலினைக் கொண்டு பிரம்மா பிநாகம் மற்றும் சாரங்கம் எனும் நிற்களை உருவாக்கினார். [2] இவற்றில் பிநாகம் வில்லை சிவபெருமானுக்கும், சாரங்கம் வில்லை திருமாலுக்கும் தந்தார். போட்டிசிவதனுசான பிநாகம், திருமாலின் சாரங்கம் என இரண்டில் எது சிறந்தது என தேவர்களுக்கு கேள்வி எழுந்தது. அதனால் திருமாலும், சிவபெருமானும் தங்கள் வில்லோடு போட்டியிட்டனர். அப் போட்டியில் சிவபெருமானின் கரவலிமை தாங்காமல் பிநாகம் பின்னப்பட்டது. [2] போட்டி முடிந்ததும் பிநாகம் தேவரதருக்கு அளிக்கப்பட்டது. இந்த தேவரதர் வம்சம் சிவதனுசை பாதுகாத்து வந்தனர். இறுதியாக சிவதனுசு தேவரதரின் வம்சமான ஜனகரிடம் இருந்தது. இராமர்விதேஹ ராஜாக்கள் வம்சத்திலே வந்த ஜனகரின் கைகளுக்கு வந்தது. ஜனகரின் மகளான சீதையின் சுயம்வரத்தில் சிவதனுசான பிநாகத்தின் நாணேற்றும் போட்டி நடந்தது. அப்போட்டியில் இராமரின் கைகளால் வில் பூட்டப்படும் போது உடைந்தது. ![]() இலக்கியத்தில்
காண்கஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia