வீரபத்திரர்சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.
இங்கே தான் வீரபத்திரரும் காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.
தோற்றம்
சதி என்கிற தாட்சாயினிதட்சனின் இளைய மகளாவாள். சிவன் மீது கொண்ட காதலால், தவமிருந்து சிவனின் அன்பை பெறுகிறாள். இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் கிடைக்கும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்று வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல்,திருமால், பிரம்மன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், ரிஷிகளையும் தட்சன் அழைத்தார்.
இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிடச் செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி யாகசாலை சென்றாள். அங்கு தச்சனால் அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.
இதனால் சிவபெருமான் ருத்திரன், மகாகாளி, வீரபத்திரன் முதலிய அவதாரங்களை உருவாக்கி தட்சனை அழித்தார்.
வீரபத்திரரின் வழிவந்தவர்கள் மற்றும் அவரை குலதெய்வமாக வழிபடுபவர்கள் வீரமுஷ்ட்டி, வீரமுட்டி அல்லது வீரபத்ரீயா என்று அழைக்கபடுகிறார்கள். வீரமுட்டிகள் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா , தெலுங்கானா மற்றும் இலங்கையில்ம் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், காலமாற்றத்தினால் ஆங்காங்கே சிதைந்து வெவ்வேறு இடங்களில் வேறு இன பெயருடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீரபத்திரசுவாமி வண்ணார்களின் குல தெய்வமாக வணங்கப்படுகிறது இந்த சமூக மக்கள் வீரபத்திரர் வழி வந்தவர்களாக தமிழகத்தில் கருதப்படுகின்றனர்.[1][2][3]
கோயில்கள்
மாதவப்பெருமாள் மற்றும் முண்டகக் கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர் - கல்யாண வீரபத்திரர்.[4]
வீரபத்திரர் கோயில், திருவானைக்காவல் - ஆறுஅடி உயர வீரபத்திரர்
சேலம் மாவட்டம், சங்ககிரி மலை கோட்டை அடிவாரத்தில் வீரபத்திரர் சுவாமி தனி கோவிலில் வீற்றிருக்கிறார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பேதாதம்பட்டி- ஆத்தனூரில் 25 அடி உயரத்தில் சத்தி வாய்ந்த வீரபத்திரர் எழுந்தருளியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் பின்புறம், செல்லீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் 400 ஆண்டுகள் பழமையான வீரபத்திரர் கோவில் அமைந் துள்ளது.இக்கோவில் பின்புறம் வெற்றிலை தோட்டம், வில்வ மரங்கள் நிறைந்து வில்வ வனம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் அகோர வீரபத்திரர் கோவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.