பினாக்கியோ (ஆங்கிலம்: Pinocchio) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இத்தாலிய கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மட்டேயோ கார்ரோன் ஆல் எழுதி இயக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. ரொபேர்டோ பெனினி, பெடெரிகொ லெலாபி, ரக்கோ பபலியோ, மஸ்சிமோ செச்சிரினி, மரீன் வக்த், மற்றும் கிகி புரோலெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் 19 திசம்பர் 2019 அன்று இத்தாலியில் வெளியானது.[4][5] இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்தில் 14 ஆகத்து 2020 அன்று வெளியிடப்பட்டது.[6][7]
இத்திரைப்படம் விமர்சகர்களிடம் பெரிதும் நல்ல வெரவேற்பினைப் பெற்றுள்ளது. 2020 டேவிட் டி டானடெல்லோ விருதுகள் விழாவில் 15 பரிந்துரைகளை பெற்றது, ஐந்தினை வென்றது.[8][9] ஒன்பது நாஸ்ட்ரோ டி அர்ஜெண்டோ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஆறினை வென்றது.[10]93ஆவது அகாதமி விருதுகளில் மொத்தம் இரண்டு விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த உடை அமைப்பு மற்றும் சிறந்த ஒப்பனை விருதுகளுக்கு.[11]
குறிப்புகள்
மேற்கோள்கள்
↑"Pinocchio (2019)". Box Office Mojo. Archived from the original on 27 December 2020. Retrieved 23 February 2021.
↑"Pinocchio (2019)". Box Office Mojo. Archived from the original on 27 திசம்பர் 2020. Retrieved 23 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)