பினோய்-பாதல்-தினேஷ் பாக்

பினோய்-பாதல்-தினேஷ் பாக் (பி. பி. டி. பாக்)
கொல்கத்தா அண்மைப்பகுதி
பி. பி. டி. பாகிலுள்ள 'எழுத்தர்களின் கட்டிடம்'
பி. பி. டி. பாகிலுள்ள 'எழுத்தர்களின் கட்டிடம்'
பினோய்-பாதல்-தினேஷ் பாக் (பி. பி. டி. பாக்) is located in கொல்கத்தா
பினோய்-பாதல்-தினேஷ் பாக் (பி. பி. டி. பாக்)
பினோய்-பாதல்-தினேஷ் பாக் (பி. பி. டி. பாக்)
கொல்கத்தாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°34′19″N 88°20′56″E / 22.572°N 88.349°E / 22.572; 88.349
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நகரம்கொல்கத்தா
மாவட்டம்கொல்கத்தா
மெட்ரோ நிலையம்மகாகரன் மெட்ரோ நிலையம்
கொல்கத்தா சுற்று ரயில்வேபி. பி. டி. தொடருந்து நிலையம்
மாநகராட்சிகொல்கத்தா மாநகராட்சி
வார்டுவார்டு எண். 45,
ஏற்றம்
36 ft (11 m)
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சலகக் குறியீட்டெண்
700001, 700062
இடக் குறியீடு+91 33
மக்களவைத் தொகுதிகொல்கத்தா வடக்கு
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிசௌரங்கி

பினோய்-பாதல்-தினேஷ் பாக் (Binoy-Badal-Dinesh Bagh,) இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் மைய வணிகப் பகுதிகளில் ஒன்றாகும். இது கொல்கத்தாவின் முக்கியமான நிர்வாக, வணிக மற்றும் வருவாய்சார் பகுதியாகவுமுள்ளது. சுருக்கமாக "பி. பி. டி. பாக்" என அழைக்கப்படும் இப்பகுதி முன்னர் "குளச் சதுக்கம்" (Tank Square) என்றும் அதன் பின்னர் "டல்ஹவுசி சதுக்கம்" எனவும் அழைக்கப்பட்டு வந்தது.[1] மேற்கு வங்காள அரசின் முக்கியக் கட்டிடங்களும் அலுவலகங்களும் இங்குள்ளன. எழுத்தர்களின் கட்டிடம், மேற்கு வங்கத் தலைமைச் செயலகம், ஆளுநர் வசிப்பிடம், சட்டப்பேரவைக் கட்டிடம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவை இங்கமைந்துள்ளன.

பெயர் காரணம்

தியாக நினைவிடம்

இப்பகுதி பினாய் பாசு, பாதல் குப்தா, தினேஷ் குப்தா ஆகிய மூன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.[2] இம்மூவரும் திசம்பர் 8, 1930 இல் அப்போதைய சிறைத்துறை தலைமை ஆய்வாளரான என். எஸ். சிம்ப்சனை டல்ஹவுசி சதுக்கத்திலிருந்த எழுத்தர்களின் கட்டிடத்தின் மேல்மாடத்தில் வைத்துக் கொலைசெய்தனர். 1847 முதல் 1856 வரை இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த டல்ஹவுசியின் பெயரால் இச்சதுக்கம் அழைக்கப்பட்டது. சில காலங்களில் இது 'தி கிரீன் பிஃபோர் தி போர்ட்", 'டேங்க் சதுக்கம்' எனவும் பெயர் கொண்டிருந்தது.[3]


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
B. B. D. Bagh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kolkata/Esplanade
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya