பின்னல் உயிரணுபின்னல் உயிரணு (grid cell, பின்னல் கலம்) பல உயிரினங்களின் மூளையிலுள்ள பல்வகை நரம்பணுக்களில் ஒரு வகையாகும். இந்த உயிரினங்கள் புறவெளியில் தங்களிடத்தை அறிந்துகொள்ள இவை உதவுகின்றன.[1][2][3][4][5][6] ![]() 1996இல் வில்லியம் எச். கால்வின் தி செரெபிரல் கோடு (பெருமூளை நெறிமுறை) என்ற ஆய்வுக்கட்டுரையில் ஒத்திசைந்த நரம்பணுக்களின் பின்னலை முன்னுரைத்திருந்தார். சீர்தர இடைவெளியில் இணைவளைவு கொத்துக்களாக இருந்த வெளிப்புற பிரமிடு நரம்பணுக்களில் அடிக்கடி பிரியும் கிளைகளின் அடிப்படையில் இந்த கருதுகோளை முன்வைத்தார்.[7] இத்தகைய பின்னல் உயிரணுக்களை நோர்வேயிலுள்ள காவ்லி நரம்பணுவியல் அமைப்புகள் கழகம் மற்றும் நினைவு உயிரியல் மையத்தில் எட்வர்டு மோசர், மே-பிரிட் மோசர் மற்றும் அவர்களது மாணவர்களான டொர்கெல்ஹாஃப்டிங், மாரியன் பைன், இசுதுர்லா மோல்டென் ஆகியோர் 2005இல் கண்டுபிடித்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக 2014ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு மோசர் இணையருக்கு வழங்கப்பட்டது. இந்த உயிரணுக்கள் யூக்ளிடிய வெளியை அறியும் குறிமுறையை செயல்படுத்துகின்றன என்ற கருதுகோளுக்கு, சமதூரத்தில் தூண்டப்படும் புறவெளி களங்களின் அமைப்புமுறையானது வித்திட்டது.[1] இந்தக் கண்டுபிடிப்பினால், இடத்தையும் திசையையும் தொடர்ந்து இற்றைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு ’நிகழ்நேர-தன்னிடம்’ குறித்த தகவலைக் கணக்கிடும் இயங்குமுறை உள்ளதென அறியப்பட்டது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia