எட்வர்டு மோசர்
எட்வர்டு மோசர் (Edvard Moser,பி: ஏப்ரல் 27, 1962) நோபல் பரிசு வென்றுள்ள நோர்வே நாட்டு உளவியலாளரும் நரம்பணுவியல் அறிவியலாளரும் காவ்லி நரம்பணுவியல் அமைப்புகள் கழகம் மற்றும் நினைவு உயிரியல் மையத்தின் (KI/CBM) நிறுவன இயக்குநரும் ஆவார். இந்த மையம் டிரான்தீம் நகரில் நோர்வீஜிய அறிவியல் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. மே-பிரிட்டும் எட்வர்டும் 1996இல் நோர்வீஜிய அறிவியல் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் நரம்பணுவியல் மற்றும் உளவியல் துறையில் இணைப் பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். மற்றும் நினைவு உயிரியல் மையத்தை 2002இலும் காவ்லி நரம்பணுவியல் அமைப்புகள் கழகத்தை 2007இலும் நிறுவினர். மோசரும் அவரது கணவர் எட்வர்டு மோசரும் கடந்த பத்தாண்டுகளில் மூளையில் இடம் குறித்த நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதைக் குறித்த முன்னோடியான ஆய்வினை நிகழ்த்தி யுள்ளனர். மோசர் தமது மனைவி மே-பிரிட்டுடன் பல பரிசுகளை வென்றுள்ளார்; லூசியா கிராசு ஓர்விட்சு பரிசு, கார்ல் இசுபென்சர் இலாஷ்லி விருது அவற்றில் சிலவாகும். 2014இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசை இருவரும் ஜான் ஓ'கீஃப் உடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.[1] 2014இல் அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் வெளிநாட்டுச் சகாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia