பிபு குமாரி தேவி
பிபு குமாரி தேவி (Bibhu Kumari Devi) திரிபுராவின் அரச குடும்பத்தின் தற்போதைய தலைவராவார். 28 ஜூன் 1944 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 அன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசின் அரசியல்வாதியாகவும் 10 வது மக்களவையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார். ஆரம்பகால வாழ்க்கைராஜா லாவ் ஷாவின் மகளான, பிபு குமாரி தேவி ஜூன் 28, 1944 இல் முசோரியில் பிறந்தார். பின்னர் ஐக்கிய மாகாணங்களில் [1] பிர் பிக்ரம் கிஷோர் டெபர்மனின் மருமகள் ஆனார். லக்னோவில் உள்ள இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[1][2] தொழில்இவர் 1983 ஆம் ஆண்டில் திரிபுரா சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக சோ்ந்தார். அதே ஆண்டு அவர் அகில இந்திய காங்கிரஸ் குழுவில் சேர்க்கப்பட்டார். 1989 முதல் 1991 வரை, திரிபுரா மாநில அரசாங்கத்தில் வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றினார். 1991ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட போது அத்தொகுதியில் போட்டியிட பணிக்கப்பட்டார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் பாஜு பான் ரியானை தோற்கடித்து இந்தியாவின் 10 ஆவது மக்களவையின் உறுப்பினரானார்.[1] 1998 ஆம் ஆண்டில் திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மாதாபரி தொகுதியில் போட்டியிட வலியுறுத்திய இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முடிவினை ஒருதலைபட்சமானது என்று விமர்சித்து அத்தேர்தலில் போட்டியிட மறுத்தார்.[3] தனிப்பட்ட வாழ்க்கைதேவி திரிபுராவின் மன்னர், கிரிட் பிக்ரம் கிஷோர் டெப் பார்மனை மணந்தார். அவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர்.[1] அவரது கணவரும் மகனும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.[4] இவரை 2015 ஆம் ஆண்டில், நீர்மகால் அரண்மனை மற்றும் உருத்திராசாகர் ஏரியை, திரிபுராவில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றமானது மாநில அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia