பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு
பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு (Praseodymium(III) carbonate) என்பது Pr2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலி நிலையில் காணப்படும் இச்சேர்மம் ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.[3] பிரசியோடைமியத்தின் எழுநீரேற்று, எண்ணீரேற்றுகளும் அறியப்படுகின்றன. இவை அனைத்தும் தண்ணீரில் கரையாதவைகளாகும்.[2] பிரசியோடைமியம்(III) குளோரோ அசிட்டேட்டை நீராற்பகுப்பு செய்து பிரசியோடைமியம்(III) கார்பனேட்டை தயாரிக்கலாம். :[2][4]
கார்பன் டை ஆக்சைடுடன் நிறைவுற்ற சோடியம் பைகார்பனேட்டை பிரசியோடைமியம் குளோரைடு கரைசலுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை தயாரிக்கலாம்.[4] வேதிப்பண்புகள்பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு அமிலங்களுடன் வினைபுரியும். இவ்வினையின் போது கார்பனீராக்சைடு வெளியிடப்படுகிறது.:[5]
இது தண்ணீரில் கரையாது. [2] பிற சேர்மங்கள்பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு ஐதரசீனுடன் வினைபுரிந்து வெளிர் பச்சைநிறப் படிகங்களான Pr2(CO3)3•12N2H4•5H2O என்ற சேர்மத்தைக் கொடுக்கிறது. தண்ணீரில் இது சிறிதளவு கரையும் ஆனால் பென்சீனில் கரையாது. 20°செல்சியசு வெப்பநிலையில் இதன் அடர்த்தி 1.873 கி/செ.மீ3.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia