பிரமிளா
பிரமிளா ( டி. ஏ. பிரமிளா ) என்பவர் தென்னிந்திய படங்களில் நடித்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1970 மற்றும் 1980 களில் மலையாளத்தில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக இருந்தார். இவர் சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். இவர் தனது கவர்ச்சியான பாத்திரங்களுக்காக புகழ் பெற்றார். 50 க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1970 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான "இன்ஸ்பெக்டர்" மூலம் அறிமுகமானார். 1973 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான அரங்கேற்றம் படத்தின் மூலமாக இவருக்கு பெரிய முன்னேற்றம் கிடைத்தது. இவர் ஒரு அமெரிக்கரை மணந்து கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்சில் குடியேறினார். இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கர். இவரது தாய்மொழி தமிழ் ஆகும். தனிப்பட்ட வாழ்க்கைஇவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் அமல் தாஸ் மற்றும் சுசீலாவுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரது அண்ணன் சீசர், ஒரு தங்கையான ஸ்வீட்டி ஒரு தம்பியான பிரபு ஆகியோர் உள்ளனர். இவரது திரைப்பட வாழ்க்கைக்காக குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. இவர் தனது ஆரம்பக் கல்வியை சென்னையின் சாரதா வித்யாலயாவில் மேற்கொண்டார். 1968 இல் வெளியான இன்ஸ்பெக்டர் திரைப்படத்தில் தனது 12 வயதில் அறிமுகமானார். இவர் நான்கு தென்னிந்திய மொழிகளில் 250 திரைப்படங்களில் நடித்தார். இவர் பால் ஸ்க்லாக்டாவை மணந்து கலிபோர்னியாவில் குடியேறினார். இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. அமெரிக்க டாலர் நோட்டுகள் அச்சடிக்கும் மத்திய அரசின் நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக 25 வருடங்கள் வேலை பார்த்து பின் ஓய்வு பெற்றார்.[2] திரைப்படவியல்தமிழ்
மலையாளம்தெலுங்கு
கன்னடம்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia