பிரமோத் குமார்
பிரமோத் குமார் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் கரும்பு தொழில்துறை அமைச்சராகவும், பீகார் அரசாங்கத்தில் சட்ட அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[2] இவர் 2005 முதல் பீகார் சட்டமன்ற உறுப்பினராக மோதிஹாரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் உள்ளார்.[3] பிரமோத் குமார், அரசியல் ஆர்வலர் யோகேந்திர பிரசாத்துக்கு மகனாகப் பிறந்தார், இவர் ஒரு மாணவராக ஜெயப்பிரகாசு நாராயணின் மொத்தப் விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். அவர் கானு (ஹால்வாய்) சாதியைச் சேர்ந்தவர். மேலும் இவர், சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார், மேலும் அவர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்புடையவராவார். ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் உறுப்பினராக இருந்ததால், ஆர். எஸ். எஸ். உடன் இணைந்த அரசியல் அமைப்பான பாரதிய ஜனதா கட்சியுடன் தீவிரமாக செயல்பட்டார். பிரமோத், மோதிஹாரி பகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவராக பணியாற்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் முதல் முறையாக பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தலில் வெற்றி பெற்றார், அதன் பின்னர் அவர் இந்த தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார். 2021 ஆம் ஆண்டின் அமைச்சரவை விரிவாக்கத்தில், அவர் நிதீஷ் குமாரின் கீழ் பீகார் அரசாங்கத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia