பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கு
பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கு (Brahmaputra Valley) கிழக்கு இந்தியாவிலுள்ள வடகிழக்கு இமயமலைத் தொடருக்கும் கிழக்கு இமயமலைத் தொடருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். கோல்பாரா மற்றும் காம்ரூப் பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, தர்ரங், நகோன் நகரங்களை உள்ளடக்கிய மத்திய பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, வடக்கு கரை, சோணித்பூர், இலக்கிம்பூர், திப்ருகார். சிவசாகர் நகரங்களை உள்ளடக்கிய கிழக்கு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு முதலிய நான்கு பகுதிகளால் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்கத்தில் பாய்கின்ற டீசுட்டா நதியும் பிரம்மபுத்திரா நதியில் கலக்கிறது பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு மழைக்காடு போன்ற காலநிலையை பெற்றிருப்பதால் இதன் மண் உலகில் காணப்படும் மிகவும் நல்ல உற்பத்தி செய்யும் மண்வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரம்மபுத்திரா நதி அசாமில் இருந்து மேற்கு வங்காளத்தை நோக்கிப் பாய்கிறது, அங்கு கங்கை நதியைச் சந்தித்து உலகின் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்குகிறது. இறுதியாக தெற்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. [2] மக்கள்பிரம்மப்புத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கு மக்களில் பெரும்பாலோர் இந்துக்களாவர். இவர்கள் பெரும்பாலும் அசாமி மொழி பேசுகிறார்கள். நாட்டின் பிற பகுதிகளை விட எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதால் இப்பகுதியில் மற்ற பகுதிகளை விட அதிக மக்கள் தொகை கொண்டும் வளமானதாகவும் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,580,977 நபர்கள் இப்பகுதியில் வசித்துக் கொண்டிருந்தனர். [3] முக்கிய நகரங்கள்வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நகரமான குவகாத்தி நகரம், அசாம் மாநிலத்தின் திப்ருகார் நகரங்கள் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்படும் முக்கிய நகரங்களாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia