பிரிஜ் மோகன் லால் சர்மாபிரிஜ் மோகன் லால் சர்மா (Brij Mohan Lal Sharma) (பிறப்பு 1903, பியாவர் ) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். [1] இவர் 1938 இல் வழக்கறிஞரானார். உப்பு சத்தியாக்கிரகம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பியாவர் தலைவர்களில் இவரும் ஒருவர். 1951 ஆம் ஆண்டு அஜ்மீர் சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக பியாவர் வடக்குத் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் 2,372 வாக்குகளைப் பெற்றார் (38.92%). [2] தேர்தலுக்குப் பிறகு, அஜ்மீர் மாநில அமைச்சரவையில் கல்வி, வருவாய் மற்றும் உள்ளாட்சி சுய அமைச்சராக பணியாற்றினார். [3] [4] அஜ்மீர் மாநிலம் ராஜஸ்தானுடன் இணைந்த பின்னர், சர்மா 1957 இல் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் பியாவர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 10,750 வாக்குகளைப் பெற்றார் (42.05%). [5] 1960 களில், சர்மா மற்றும் சிமன் சிங் லோதா (முறையே 'பி' மற்றும் 'சி' என்று அழைக்கப்பட்டனர்) இடையே ஏற்பட்ட மோதல்களால் பியாவர் காங்கிரசு கிளை உடைந்தது. இது 1962 தேர்தலில் தோல்விக்கு வழிவகுத்தன. [6] அதிகாரப்பூர்வ காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்ட சர்மா 9,575 வாக்குகள் (30.48%) பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். காங்கிரசு கட்சியின் கிளைக்குள் ஏற்பட்ட பிளவு இந்தியப் பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் சுவாமி குமாரானந்த் தேர்தலில் வெற்றி பெற உதவியது. [7] 1967 தேர்தலிலும் சர்மா 14,187 வாக்குகளுடன் (34.15%) இரண்டாவது இடத்தையேப் பிடித்தார். [8] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia