பிரியம் (திரைப்படம்)
பிரியம் (Priyam) என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும் என். பாண்டியன் இயக்கிய இப்படத்தை கஸ்தூரி பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் என்ற பதாகையின் கீழ் அசோக் சாம்ராஜ் தயாரித்தார். இப்படத்தில் அருண் விஜய், மந்த்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். பிரகாஷ் ராஜ் துணைப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார்.[1] நடிகர்கள்
இசைஇப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார்.
வெளியீடுஇந்த படம் வணிக ரீதியாக சுமாரான வெற்றியை ஈட்டியது.[2] இந்த படம் பின்னர் 2000 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர்கள் சி. எச். கனேஸ்வர ராவ் மற்றும் பி. இந்திரா ஆகியோரால் தெலுங்கில் இதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்பட்டதின் வெற்றியால் ஊக்கம் பெற்ற தயாரிப்பாளர் அசோக் சாம்ராட், முரளி மற்றும் திவ்யா உன்னி ஆகியோரைக் கொண்டு பாண்டியனின் இயக்கத்தில் கல்வெட்டு என்ற படத்தைத் தொடங்கினார். தயாரிப்பு சிக்கல் காரணமாக படம் பின்னர் படத்தின் பணிகள் நின்றன. இதன் பிறகு சாம்ராட் திரைத்துறையிலிருந்து விலகினார்.[3][4] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia