பிருந்தாவன் அதிவிரைவு தொடர்வண்டி![]() பிருந்தாவன் அதிவிரைவு தொடர்வண்டி (Brindavan Express), எண்:12639/12640 என்பது பெங்களூரு - சென்னை இடையே தினசரி இயக்கப்படும் தொடர்வண்டியாகும். சென்னை மத்திய தொடர்வண்டி நிலையதில் காலை 07:05 ற்கு புறப்படும் இது நண்பகல் 02:00 மணிக்கு பெங்களூரு வந்தடையும். மீண்டும் நண்பகல் 03:00 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு , இரவு 09:05 ற்கு சென்னை வந்தடையும். வரலாறு1964ஆம் ஆண்டு தென்னக ரயில்வேயால் முதல் முதலாக இரு மாநிலங்களுக்கிடையே இயக்கப்பட்ட தொடர்வண்டியான இது, ஆரம்பத்தில் 7.5 மணி நேரம் பயணமாகவும் 360 கிலோமீட்டர் பயண தூரமாக கொண்டிருந்தது[1]. நிறுத்தங்கள்பிருந்தாவன் அதிவிரைவு தொடர்வண்டி அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம் மற்றும் பங்காருபேட்டை ஆகிய ஐந்து முக்கிய தொடர்வண்டி நிலைய சந்திப்புகளை கடந்து செல்கிறது. அது மட்டுமன்றி பெரம்பூர், வாலாஜா ரோடு, ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களுரு கண்டோன்மென்ட் ஆகிய நிலையங்களிலும் நின்று செல்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia