பிலிம்பேர்
பிலிம்பேர் என்பது பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி சினிமா பற்றிய ஒரு ஆங்கில மொழி இதழாகும். இது டைம்சு குழுவின் சார்பு நிறுவனமான வேர்ல்ட் வைட் மீடியாவால் 1952 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்படுகிறது.[2] 1954 ஆம் ஆண்டிலிருந்து இவ்விதழ் பிலிம்பேர் விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், கிழக்கு பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. வரலாறுஇவ்விதழானது 1952 ஆம் ஆண்டில் டைம்சு குழுமத்திலிருந்து வெளியானது. இந்தியன் எக்சுபிரசு செய்தித்தாள் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகுதான் பிலிம்பேர் வெளியிடப்பட்டது. 1953 ஆம் ஆண்டில் பிலிம்பேர் விருதுகள் முதல் முறையாக வழங்கப்பட்டன.[3] முதலில் இந்தி திரைப்படங்களுக்கான முதல் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களுக்கும் விருது கொடுக்கும் விழா தொடங்கப்பட்டது. இது விருதுகள் அகாடமி விருதுகளை அடிப்படையாகக் கொண்டவை, வெற்றியாளர்களை வாசகர்களின் வாக்குகள் மூலம் தீர்மானிக்கப்பட் டது, இதனால் "பிரபலமான விருதுகள்" என்று அழைக்கப்படுகிறது. 2014 இலிருந்து பிலிம்பேர் விருதுகள் மேற்கு வங்காளம், ஒடியா, அசாமிய மொழி திரைப்படங்களுக்கும் வழங்கப்படுகிறது.[4][5] மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளியிணைப்பு |
Portal di Ensiklopedia Dunia