கோடம்பாக்கம்
அமைவிடம்தியாகராய நகர், வடபழநி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அசோக் நகர் மற்றும் மேற்கு மாம்பலம் ஆகிய சென்னையின் பிறப் பகுதிகள் கோடம்பாக்கத்தின் எல்லைகளாக உள்ளன. சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரைச் செல்லும் புறநகர் ரயில் பாதை கோடம்பாக்கம் வழியாகச் செல்கின்றது. கோடம்பாக்கம் புறநகர் ரயில்நிலையம் இப்பாதையில் அமைந்துள்ளது. கோடம்பாக்கம் வழியே செல்லும் ஆற்காடு சாலை (என்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். யுனைட்டட் இந்தியா காலனி, ரங்கராஜபுரம், டிரஸ்ட்புரம் மற்றும் டெய்லர்ஸ் எஸ்டேட் ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்புப் பகுதிகளாகும். நிறுவனங்கள்லிபர்டி திரையரங்கம், இளையராஜா ஸ்டுடியோஸ், சேகர் பேரங்காடி, மேனகா அழைப்பிதழ்கள், மீனாட்சி கல்லூரி, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, லயோலா மேனிலைப்பள்ளி மற்றும் பாத்திமா மேனிலைப்பள்ளி ஆகியவை கோடம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களாகும். ஆங்கிலச் செய்திப் பத்திரிக்கையான 'மீடியா வாய்ஸ்' கோடம்பாக்கத்திலிருந்துத்தான் வெளியாகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia