பிளஷிங் மெடோசு–கோரோனா பூங்கா
பிளஷிங் மெடோசு-கோரோனா பூங்கா (Flushing Meadows–Corona Park) வழமையாக பிளஷிங் மெடோசு பூங்கா, அல்லது சுருக்கமாக பிளஷிங் மெடோசு நியூயார்க் நகரத்தில் குயின்சு பரோவில் அமைந்துள்ளது. பிளஷிங் விரிகுடாவிலிருந்து மாநிலங்களிடை நெடுஞ்சாலை 678க்கும் கிராண்டு சென்ட்ரல் பார்க்வேக்கும் இடையே லாகோர்தியா வானூர்தி நிலையத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இங்குதான் யூ.எசு. ஓப்பன் நடக்கும் பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிசு மையம், நியூயார்க் மெட்சு அடிப்பந்தாட்ட அணியின் தாயகமான சிட்டி பீல்டு அரங்கம், நியூயார்க் ஹால் ஆஃப் சயின்சு, குயின்சு கலை அருங்காட்சியகம், குயின்சு பூங்கா நாடக அரங்கம், குயின்சு காட்டுயிர் மையம், நியூயார்க் மாநில அரங்கம் ஆகியன அமைந்துள்ளன. முன்பு இந்தப் பூங்காவில் இருந்த ஷியா விளையாட்டரங்கம் 2009இல் இடிக்கப்பட்டது. நியூயார்க் நகரப் பூங்காக்களில் நான்காவது பெரிய பூங்காவாக உள்ள பிளஷிங் மெடோசு 1939இல் நியூயார்க் உலக கண்காட்சிக்காக உருவாக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு நடந்த உலகக்கண்காட்சியும் இங்கு அமைக்கப்பட்டது. 2013இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இதன் பரப்பளவு 897 ஏக்கர்கள் (363 ha) ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] நியூயார்க் நகர பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு துறை இதன் உரிமையாளர் ஆகும்; தனியார் இலாபநோக்கற்ற நிறுவனம் பிளஷிங் மெடோசு-கோரோனா பூங்கா காப்பகம் இதனை பராமரிக்கிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியில் குயின்சு சமூக வாரியம் 4 அமைந்துள்ளது.[2] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia