நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்![]() நியூ யார்க் மாநிலத்திலுள்ள நியூயார்க் நகரம் ஐந்து பரோக்களால் ஆனது. இவை மன்ஹாட்டன், புருக்ளின், குயின்சு, பிரான்க்சு, மற்றும் இசுட்டேட்டன் தீவாகும். ஒவ்வொரு பரோ அல்லது மாவட்டமும் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களின் கவுன்ட்டிகளுக்கு இணையானவை. 1898இல் நகரம் ஒன்றிணைக்கப்பட்டபோது கவுன்ட்டி அரசுகள் கலைக்கப்பட்டன; கூடவே கவுன்ட்டியின் அனைத்து நகர, ஊரக,சிற்றூர் அரசுகளும் கலைக்கப்பட்டன. புதியதாக ஒன்றிணைக்கப்பட்ட நகரத்தின் ஐந்து அடிப்படை அங்கங்களாக அமைந்த இவற்றின் தனித்தன்மை வாயந்த அரசாண்மையை வரையறுக்கும் வண்ணம் பரோ என்ற பெயர் ஏற்கப்பட்டது. நியூயார்க் நகரத்தின் பரோக்கள் கனெடிகட், நியூ செர்சி, பென்சில்வேனியா, அலாஸ்கா மற்றும் பிற அமெரிக்க மாநிலங்களிலும் இலண்டன் பெருநகர்ப் பகுதியிலும் வழங்கப்படும் பரோக்களின் தன்மையிலிருந்து மாறுபட்டவை. பின்னணிநியூயார்க் நகரம் வழமையாக ஐந்து பரோக்கள் எனக் கூட்டாகக் குறிப்பிடப்படுகின்றது; முழுமையான நியூயார்க் நகரத்தையும் ஐயமறக் குறிப்பிட இந்தப் பயன்பாடு வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் மன்ஹாட்டன் பகுதியையே குவியப்படுத்துவதற்கு மாற்றாக, அரசியல்வாதிகள் இந்தப் பயன்பாட்டை மேற்கொள்கின்றனர். ![]() ஒரே கவுன்ட்டியில் அடங்கும் அமெரிக்காவின் மற்ற நகரங்களைப் போலன்றி, நியூயார்க்கின் ஒவ்வொரு பரோவும் மாநிலத்தின் ஒரு கவுன்ட்டியாக உள்ளது. அனைத்து பரோக்களும் 1898இல் நியூயார்க் நகரத்தை ஒருங்கிணைக்கும் சமயத்தில் உருவாக்கப்பட்டன. துவக்கத்தில் பிரான்க்சு நியூயார்க் கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது; 1914இல் பிரான்க்சு கவுன்ட்டி நிறுவப்பட்டது.
குயின்சு பரோ துவக்கத்தில் பெரிய குயின்சு கவுன்ட்டியின் மேற்கு பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 1899இல் குயின்சு கவுன்ட்டியின் கிழக்குப் பகுதியில் இருந்த மூன்று நகரங்கள் பிரிந்து நாசோ கவுன்ட்டி உருவானது. இசுட்டேட்டன் தீவு அலுவல்முறையாக ரிச்மாண்ட் பரோ என அழைக்கப்பட்டு வந்தது; 1975இல் பொதுப்பயன்பாட்டிற்கேற்ப இசுட்டேட்டன் தீவு என பெயர் மாற்றம் பெற்றது. மன்ஹாட்டன் நீங்கலாக, ஒவ்வொரு பரோவிற்கும் பரோ தலைவர் உள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 1990இல் ஐக்கிய நியூயார்க் நகர மதிப்பீட்டு வாரியம் கலைக்கப்பட்ட பின்னர்[4]), பரோ தலைவர்களின் செயலதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன; பரோவிற்கு எந்த சட்டவாக்க உரிமையும் இல்லை. நியூயார்க் நகரத்தின் செயல் அதிகாரங்களுக்கு நியூயார்க் நகர மேயர் பொறுப்பேற்கிறார். சட்டவாக்க செயற்பாடுகள் நியூயார்க் நகராட்சி அவையின் பொறுப்பாகும். பரோக்கள் கவுன்ட்டிகளானதால், மாநிலத்தின் மற்ற கவுன்ட்டிகளைப் போலவே, ஒவ்வொரு பரோவும் தங்களுக்கான மாவட்ட வழக்குரைஞரை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. குடியியல் நிதிபதிகளும் பரோ வாரியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; இருப்பினும் பொதுவாக இவர்கள் நகரம் முழுமையிலும் பணிபுரியலாம். மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia