பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம்
1888-இல் இங்கிலாந்து கால்பந்துக் கூட்டிணைவுத் தொடர் தொடங்கப்பட்டபோது அதன் நிறுவன-உறுப்பினராகவிருந்தது; மேலும், இங்கிலாந்தின் கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் பிரீமியர் லீக் ஆகிய இரண்டிலும் நிறுவன-உறுப்பினராகவிருந்த மூன்று கால்பந்துக் கழகங்களுள் இதுவும் ஒன்றாகும்; மற்ற இரண்டு கழகங்கள் - அஸ்டன் வில்லா மற்றும் எவர்டன். பிளாக்பர்ன் நகரில் அமைந்திருக்கும் "எவுட் பார்க்" மைதானத்தில் 1890-ஆம் ஆண்டிலிருந்து தமது அமைவிடப் போட்டிகளை ஆடிவருகிறது. இக்கழகம் 3 கூட்டிணைவுத் தொடர் வாகைப் பட்டங்களையும் (இரண்டு முதல்நிலை கூட்டிணைவுத் தொடர் வாகையர் மற்றும் ஒரு பிரீமியர் லீக் வாகையர் பட்டம்), 6 எஃப் ஏ கோப்பைகளையும், 1 கால்பந்து கூட்டிணைவுக் கோப்பையையும் வென்றுள்ளது.[2] மேலும், எஃப் ஏ கோப்பையை மூன்று முறை தொடர்ச்சியாக வென்ற ஒரே கால்பந்துக் கழகம் பிளாக்பர்ன் ரோவர்சே ஆகும். பிரீமியர் லீக் வாகைப் பட்டம் சூடிய ஆறு கால்பந்துக் கழகங்களுள் பிளாக்பர்ன் ரோவர்சும் ஒன்றாகும். மற்றையவை: மான்செஸ்டர் யுனைடெட் (13), செல்சீ (4), ஆர்சனல் (3), மான்செஸ்டர் சிட்டி (2) மற்றும் லெஸ்டர் சிட்டி (1). உசாத்துணைகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia