பிளாட்டோனியக் கல்விக்கழகம்பிளாட்டோனியக் கல்விக்கழகம் (Platonic Academy, பண்டைய கிரேக்கம்: Ἀκαδημία) பிளாட்டோவால் கிமு 387இல் ஏதென்சில் நிறுவப்பட்டது. தன்னுடைய தனி மெய்யியல் பள்ளியாகிய லைசியம் (Lyceum) கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கு முன்பு இங்கு அரிசுட்டாட்டில் இருபது ஆண்டுகள் (கி.மு 367 –கி.மு 347) கல்வி கற்றுள்ளார். இது எலனியக் காலம் (Hellenistic period) முழுவதும் ஐயுறவுவாதப் பள்ளியாக, கி.மு 83இல் இலாரிசாவின் பிலோ இறக்கும்வரை தொடர்ந்தது. உரோமக் காலகட்டத்தில் ஏதென்சில் பிளாட்டோவின் மெய்யியல் தொடர்ந்து கற்பிக்கப்பட்டாலும் கி.பி 410க்குப் பிறகே மீண்டும் அது புதுப்பிளாட்டோனிய மையமாகப் புதுப்பிக்கப்பட்டு. இறுதியாக இது முதலாம் ஜசுட்டினியனால் கி.பி 529இல் மூடப்படும்வரை தொடர்ந்தது. இடம்![]() கல்விக்கழகம் ஒரு பள்ளியாகும் முன்பே சிமோன் அவ்விடம் சுற்றி மதிற்சுவரை எழுப்பினார்.[1] அதனுள்ளே அறிவுத் தெய்வமான அதீனாவுக்குப் படைக்கப்பட்ட வழிபாட்டுமரமாக ஆலிவ் மரம், பண்டைய ஏதென்சு நகரின் மதிற்சுவருக்கு வெளியே. அமைந்திருந்தது.[2] இந்த இடத்தின் தொல்மரபுப் பெயர் எக்காடெமியா (Hekademia, Ἑκαδήμεια). இது செவ்வியற் காலத்தில் கல்விக்கழகமாகப் படிமலர்ந்தது. இது கிமு 6ஆம் நூற்றாண்டளவில் அதீனிய வீரன், அதாவது தொன்ம வீரனான அகாதெமொசுடன் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டது. மேலும் காண்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia