பிள்ளையார் கோயில்பிள்ளையார் கோயில் என்பது இந்துக் கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் தெய்வம் பிள்ளையார் அம்சமாக இருக்கும் பட்சத்தில் அக்கோயில் பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. விநாயகர் கோயில் என்ற மற்றொரு பெயரும் உண்டு. பிள்ளையார் அம்சமானது, வெவ்வேறு திருநாமங்கள் மற்றும் தோற்றங்கள் கொண்டு விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, கற்பக விநாயகர், முக்குறுணி விநாயகர், கணபதி, உச்சிட்ட கணபதி, முந்தி விநாயகர், கணேசர், கணநாதர், வலம்புரி விநாயகர், சித்தி விநாயகர், சிவசக்தி விநாயகர், விக்கினேசுவரன், சக்தி கணபதி, சித்தி புத்தி விநாயகர், இலட்சுமி கணபதி, நர்த்தன கணபதி, வல்லப கணபதி, வரசித்தி விநாயகர் மற்றும் விக்ன விநாயகர் என முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடலாம். சிவகங்கை பிள்ளையார்பட்டியில், கற்பக விநாயகர் கோயில்[1] திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில், உச்சிட்ட கணபதி கோயில்[2] கோயம்புத்தூர் புலியகுளத்தில், முந்தி விநாயகர் கோயில்[3] மதுரையில், மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர்[4] சன்னதி, சென்னையின் இராயபுரம் பகுதியில் வரசித்தி விநாயகர் கோயில்[5] ஆகியவை சில முக்கியமான பிள்ளையார் கோயில்களாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia