பி. கே. சிறீமதி
பி. கே. சிறீமதி (பிறப்பு 4 மே 1949), பி. கே. சிறீமதி டீச்சர் என்று பிரபலமாக அறியப்பட்டவர், கேரளத்தினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மயில் பஞ்சாயத்தில் பிறந்தார். கேரளச் சட்டமன்றத்தில் பையனூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் கேரள சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2006 முதல் 2011 வரை கேரளாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.[2][3] கண்ணூர் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 16ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்தார். வாழ்க்கை வரலாறுசிறீமதி 4 மே 1949-இல் கெழு நம்பியார் மற்றும் பி.கே. மீனாட்சி அம்மா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[4] இவர், நேருவம்பிரம் மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த போது, 2003ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் 1995 முதல் 1997 வரை கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து ஆவதற்கு முன்பு சில காலம் கண்ணூர் மாவட்ட குழுவின் நிலைக்குழு தலைவராக இருந்தார். இப்போது இவர் ஏ.ஐ.டி.டபுள்யூ.ஏ. மாநில செயலாளராகவும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். பையனூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் கேரள சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 2014 மக்களவைத் தேர்தலில் கண்ணூர் மக்களவைத் தொகுதியில் கே. சுதாகரனை 6566 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் 94,559 வாக்குகள் வித்தியாசத்தில் கே. சுதாகரனிடம் தோற்றார். பதவிகள்இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia