பி. சத்ய நாராயண் ரெட்டி
பி. சத்ய நாராயண் ரெட்டி (B. Satya Narayan Reddy; பிறப்பு: 1927 ஆகத்து 21 - இறப்பு: 2012 அக்டோபர் 6) இவர் ஓர் சுதந்திர போராட்ட வீரரும், சோசலிச அரசியல்வாதியும் மற்றும் உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தார். [1] [2] [3] ரெட்டி 2012 அக்டோபர் 6, அன்று ஐதராபாத்த்தில் தனது 85ஆவது வயதில் காலமானார். ஆரம்ப கால வாழ்க்கைரெட்டி தெலங்காணாவின் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அன்னாரம் கிராமமான சாத்நகரைச் சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். [4] சுதந்திர போராட்ட வீரர்14 வயதான ரெட்டி, 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்களின் ஊர்வலத்தை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் 1947 இல் ஐதராபாத் மக்கள் இயக்கத்தில் பங்கேற்றார். அங்கு இவர் ஐதராபாத் நிசாமுக்கு எதிராக ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தை ஏற்பாடு செய்தார். அதற்காக இவர் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில் இவர் தனது சிறைத் தோழர்களிடையே வாரந்தோறும் வெளியான பயாம்-இ-நாவ் என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். [4] அரசியல் வாழ்க்கைஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோகியா ஆகியோரால் ஈர்க்கப்பட்ட ரெட்டி சோசலிச இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆனார். வினோபா பாவேவின் நிலக்கொடை இயக்கத்தில் பங்கேற்றார். காங்கிரசின் தொடர்பைத் தவிர்த்து, இவர் சோசலிஸ்ட் கட்சி, ஜனதா கட்சி மற்றும் லோக்தளுடன் பலவிதமாக தொடர்பு கொண்டிருந்தார். ஜனதா கட்சியின் வேட்பாளராக 1978 ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் இவர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][4] ஆளுநர் பதவிக்காலம்ரெட்டி 1990 பிப்ரவரி 12 முதல் 1993 மே 25 வரை உத்திரப் பிரதேச ஆளுநராகவும், 1993 சூன் முதல் 1995 சூன் 17 வரை ஒடிசாவின் ஆளுநராகவும் [6] பணியாற்றினார்.[7] இவர் 1993 சூலை 13 முதல் 1993 ஆகத்து 14 வரை மேற்கு வங்காள ஆளுநராக கூடுதல் பொறுப்பையும் வகித்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இவர் உத்தரபிரதேச ஆளுநராக இருந்தார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia