பி. வசந்தா

பி. வசந்தா
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்தனிப்பாடகர்
பிறப்புமார்ச்சு 20, 1944 (1944-03-20) (அகவை 81)
மச்சிலிப்பட்டணம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணி பாடுதல், இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாடுதல்
இசைக்கருவி(கள்)குரலிசைக் கலைஞர்
இசைத்துறையில்1962-தற்போது வரை

பி. வசந்தா (B. Vasantha) (பிறப்பு 29 மார்ச் 1944) ஒரு தென்னிந்திய பின்னணி பாடகியான[1] இவர் கலைமாமணி விருது (தமிழ்நாடு) மற்றும் உகாதி விருது (ஆந்திரா) ஆகிய இரண்டு மாநில அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

போடுபள்ளி பாலவசந்தா மார்ச் 28, 1944 அன்று ஆந்திராவின் குண்டூரில் பிறந்தார். இவரது பெற்றோரின் பெயர்கள் போடுபள்ளி ரவீந்திரநாத் மற்றும் துர்கா என்பதாகும். இவரது தந்தை ஒரு நல்ல நடிகர். பல நாடகங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ஒரு இசைக்கலைஞரும், ஓவியரும், புகைப்படக்காரரும் ஆவார். இவரது தாயார் துர்கா ஒரு நல்ல வீணை இசைக்கலைஞர். தனது பெற்றோரின் செல்வாக்கின் கீழ் வசந்தா இசை மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். மகாவடி வெங்கடப்பையா மற்றும் இராகவேந்திர ராவ் ஆகியோரிடமிருந்து பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார். வினோத் இசைக்குழுவில் சேர்ந்து பல திரைப்பட பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். தனது தந்தையால் ஊக்கப்படுத்தப்பட்ட இவர் திரைத்துறையில் நுழைந்தார்.[2]

குடும்பம்

இவரது கணவர் தோர்பலா சுதாகர் ஐதாராபாத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். மூத்த மகளின் பெயர் சுரேகா. இரண்டாவது மகள் சுசித்ரா. மகன் சரத்.

திரையுலகம்

இவர் முதன்முதலில் 1961ஆம் ஆண்டு "வக்தனம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் பாடினார். பின்னர் கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி போன்ற படங்களில் 4000 பாடல்களைப் பாடினார்.[2] இவர் எல்லா வகையான பாடல்களையும் பாடினாலும், குழந்தைகளின் பாடல்கள் தான் இவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தன. கன்னடத் திரைப்படமான "ராஜநார்தகியா ரஹஸ்யா" மற்றும் தெலுங்குத் திரைப்படமான "மஞ்சிகி ஸ்தானம் லேது" ஆகியவற்றுக்கு இசையமைத்தார். இவர் பாடிய முதல் மலையாள படம் "முத்தாலாலி" என்பதாகும். தமிழில் கொஞ்சும் குமரி என்ற படத்தில் அறிமுகமானார். கே.ஜே.யேசுதாஸுடன் மலையாளத்தில் ஏராளமான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

விருதுகள்

  • கலைமாமணி (தமிழ்நாடு)
  • உகாதி விருது (ஆந்திரா)
  • ஜி தேவராஜன் சக்திகடா விருது [3]

மேற்கோள்கள்

  1. "B.Vasantha".
  2. 2.0 2.1 2.2 Pradeep, K. (28 March 2019). "Music, her life". The Hindu. https://www.thehindu.com/entertainment/music/b-vasantha-who-has-regaled-the-malayalam-music-industry-with-her-sonorous-voice-has-never-been-given-her-due-in-kerala/article26663908.ece. பார்த்த நாள்: 15 January 2020. 
  3. "G Devarajan Shakthigadha award for singer B Vasantha - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-01-15.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya