பீம்பெர் மாவட்டம்
பீம்பெர் மாவட்டம் (Bhimber District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பீம்பெர் நகரம் ஆகும். 1,515 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2017 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 4,20,624 ஆகும்.[1]அலுவல் மொழி உருதுவாக இருப்பினும், பெரும்பான்மையான மக்கள் பஞ்சாபி மொழி, பகாரி மொழி மற்றும் தோக்ரி மொழிகளை பேசுகின்றனர்.[2][3] அமைவிடம்பீம்பெர் மாவட்டத்தின் வடக்கில் கோட்லி மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் ரஜௌரி மாவட்டம், தெற்கில் குஜராத் மாவட்டம், மேற்கில் மிர்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம்பீம்பெர் மாவட்டம் 3 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது[4]அவைகள்:
தட்ப வெப்பம்கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பம் 45 பாகை செல்சியசும், குளிர்காலத்தில் 1 பாகை செல்சியஸ் வெப்பமும் கொண்டுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia