2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு (2017 Census of Pakistan) 15 மார்ச் 2017 முதல் 25 மே 2017 முடிய பாகிஸ்தான் புள்ளியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.[1][2] 25 ஆகஸ்டு 2017-இல் துவக்க மதிப்பீட்டின்படி பாகிஸ்தான் மக்கள்தொகை 21,27,42,631 (இருபத்தி ஒன்று கோடியே இருபத்தி ஏழு இலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து அறுநூத்தி முப்பத்தி ஒன்று) என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.[3][4][5] விளக்கம்80 மொழிகள் பேசப்படும் பாகிஸ்தானில், மக்கள்தொகை கணக்கெடுப்பை 9 முக்கிய மொழிகளில் பதிவு செய்ய 91,000 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.[6] மக்கள்தொகை கணக்கெடுப்பு 15 மார்ச் 2017 முதல் 13 ஏப்ரல் 2017 முடிய முதல் கட்டமாகவும், பின்னர் 25 ஏப்ரல் 2017 முதல் 24 மே 2017 முடிய இரண்டாம் கட்டமாகவும் மேற்கொள்ளப்பட்டது.[7] தற்காலிக முடிவுகள்25 ஆகஸ்டு 2017 அன்று பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது.[8] பாகிஸ்தான் மக்கள்தொகை 19 ஆண்டுகளில் 57% உயர்ந்து 207,774,520 ஆக உள்ளதை தற்காலிகமாக கணக்கெடுக்கப்பட்டது.[9][10] பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜித்-பல்திஸ்தான் பகுதிகளை தவிர்த்த பாகிஸ்தான் மாகாணங்களின் மொத்த மக்கள்தொகை அறிக்கை 2018-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[11][12][13][14] பாகிஸ்தான் மொத்த மக்கள்தொகையில் நகர்புற மக்கள்தொகை 7,55,80,000 அல்லது 36.4% ஆகும்.[15]
நகர்புற மக்கள்தொகைபாகிஸ்தானின் 10 மாநகரங்களில் 1998-ஆண்டிலிருந்து 2017 முடிய மக்கள்தொகை வளர்ச்சி 57% வளர்ந்துள்ளது.[16][17] இந்த 10 முக்கிய நகரங்களின் மொத்த மக்கள்தொகை 1998-இல் 2,34,75,067 ஆக இருந்தது. 2017-இல் இது 4,09,56,232 உயர்ந்துள்ளது.[18][19][20]
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia