பீற்றா

கிரேக்க நெடுங்கணக்கு
Αα அல்ஃபா Νν நியூ
Ββ பீற்றா Ξξ இக்சய்
Γγ காமா Οο ஒமிக்ரோன்
Δδ தெலுத்தா Ππ பை
Εε எச்சைலன் Ρρ உரோ
Ζζ சீற்றா Σσς சிகுமா
Ηη ஈற்றா Ττ உட்டோ
Θθ தீற்றா Υυ உப்சிலோன்
Ιι அயோற்றா Φφ வை
Κκ காப்பா Χχ கை
Λλ இலமிடா Ψψ இப்சை
Μμ மியூ Ωω ஒமேகா
அநாதையாய்
Ϝϝ டிகாமா Ϟϟ கோப்பா
Ϛϛ சிடீகுமா Ϡϡ சாம்பை
Ͱͱ ஹஈற்றா Ϸϸ உஷோ
Ϻϻ சான்

பீற்றா (Beta, கிரேக்கம்: βήτα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது இரண்டு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான பெத்திலிருந்தே (Beth) பீற்றா பெறப்பட்டது. பீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் இலத்தீன் எழுத்து B, சிரில்லிய எழுத்துகள் Б, B என்பனவாகும்.

பயன்பாடுகள்

அச்சுக் கலை

அச்சுப் பதிப்பின்போது சில வேளைகளில் செருமானிய எழுத்தான ß பீற்றாவுக்குப் பதிலாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.

அறிவியல்

அறிவியலில் பீற்றாத் துகள், பீற்றாச் சிதைவு முதலிய சொற்களில் பீற்றா பயன்படுத்தப்படுகின்றது.

வானியல்

பீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]

தொழினுட்பக் குறிப்புகள்

விளக்கம் வரியுரு ஒருங்குறி மீப்பாடக் குறிமொழி
கிரேக்கப் பேரெழுத்துப் பீற்றா Β U+0392 Β
Β
கிரேக்கச் சிற்றெழுத்துப் பீற்றா β U+03B2 β
β
கிரேக்கப் பீற்றாக் குறியீடு ϐ U+03D0 ϐ

மேற்கோள்கள்

  1. கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)
  2. கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)
  3. ["பீற்றாப் புயல் அக்டோபர் 26-31 2005 (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-10-21. Retrieved 2012-04-25. பீற்றாப் புயல் அக்டோபர் 26-31 2005 (ஆங்கில மொழியில்)]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya