எச்சைலன்
எப்சைலன் (Epsilon, கிரேக்கம்: έψιλον) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஐந்தாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஐந்து என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான ஈயிலிருந்தே ( வரலாறுபினீசிய எழுத்தான ஈயிலிருந்தே எச்சைலன் பெறப்பட்டது. பண்டைய கிரேக்க எழுத்து முறையில் எச்சைலனும் ஈயும் ஒரே மாதிரியாகவே காணப்பட்டன. ஆனால், தற்போது ஈயின் கண்ணாடி விம்பத்தை ஒத்ததாகவே எச்சைலன் எழுதப்படுகின்றது. பயன்பாடுகள்பேரெழுத்து எச்சைலன் இலத்தீன் Eஐ ஒத்திருப்பதால் கிரேக்க மொழியைத் தவிர ஏனைய இடங்களில் பெரிதாகப் பயன்படுத்தப்படுவதில்லை. கணிதம்கணிதத்தில் உலகத்தொடையைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்து எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது.[3] தொடையில் மூலகம், மூலகமன்று என்பனவற்றைக் காட்டுவதிலும் எச்சைலனின் மாறுபட்ட வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[4] வானியல்உடுக்கூட்டமொன்றில் ஐந்தாவது துலக்கமான உடுவைக் குறிப்பதற்கு எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது. ஒருங்குறி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia