புசெபெலஸ்![]() புசெபெலஸ் (Bucephalus அல்லது Bucephalas (/bjuːˈsɛfələs//bjuːˈsɛfələs/; பண்டைக் கிரேக்கம்: Βουκέφαλος or Βουκεφάλας, from βούς bous, "ox" and κεφαλή kephalē, "head" meaning "ox-head") (கி.மு. 355 - கி.மு. 326 ) என்பது பேரரசர் அலெக்சாந்தரின் குதிரை ஆகும். இது பழங்காலத்தில் புகழ்பெற்ற குதிரையாக இருந்தது.[1] இக்குதிரை கி.மு. 326 ல் செலம் போருக்குப் பின்னர் இறந்துவிட்டதாக பழங்காலப் பதிவுகள்[2] கூறுகின்றன. இது நடந்த இடம் தற்போதைய பாக்கித்தானின், பஞ்சாப் மாகாணம் ஆகும். இது பின்னர் பாக்கித்தானின் பஞ்சாப் பகுதியில் ஜீலத்தை அடுத்துள்ள ஜலம்பூரி ஷெரிப்பில் அடக்கம் செய்யப்பட்டது. பஞ்சாப் மாகாணத்திலுள்ள மண்டி பஹாவுதீன் மாவட்டத்தில் உள்ள பலியாபா நகரில் புஷ்பாலஸ் அடக்கம் செய்யப்பட்டதாக மற்றொரு பதிவு குறிப்பிடுகிறது. புசெபெலசை அடக்குதல்![]() இந்தக் குதிரையானது பெரிய கருப்பு நிறக் குதிரை என்றும் அதன் புருவத்தின் மீது ஒரு பெரிய வெள்ளை நட்சத்திரத்துடன் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. இதன் கண்கள் நீல நிறத்தவை என்றும் கூறப்படுகிறது. 344 இல் அலெக்சாந்தர் தன் தந்தையின் முந்நிலையில் "பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதில், அந்தக் குதிரையை எப்படி அடக்கி பெற்றார் என்பது பற்றி புளூட்டாக் விவரித்து கூறியுள்ளார்:[3] பிலிப்பீனஸின் என்ற ஒரு குதிரை வணிகர் அலெக்சாந்தரின் தந்தையான இரண்டாம் பிலிப்பிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார். அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். அதோடு அந்த குதிரையை தானே பழக்கப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். அந்தக் குதிரையை அதன் நிழலைக்காண இயலாதவாறு கிழக்கு நோக்கி நிறுத்தி அதை அடக்கி பழக்கப்படுத்தியும் காட்டினார். புளூட்டாக் இதை தனது குறிப்பில் மிக விரிவாக புகழ்ந்து குறிப்பிடுகிறார். அரசர் பிலிப் தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், "மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப்போகிறாய், உன்னை பொருத்தமட்டில் மக்கெடோன் மிகச்சிறியது." என்று கூறினதாக புளூட்டாக் விளக்குகிறார். அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார். அலெக்சாந்தரும் புசெபெலசும்![]() அலெக்சாண்டர் அந்த குதிரைக்கு புசெபெலஸ் என்று பெயரிட்டார். அலெக்சாந்தருடன் இணைந்து புசெபெலசு பல போர்களில் கலந்துகொண்டுள்ளது. இந்தக் குதிரை தான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடே சுமந்து வந்தது. அந்த குதிரையின் மீது கொண்ட அன்பின் காரணமாக ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் பூசிஃபலா (Bucephala) என்று பெயரிட்டார். பிற்காலத்தில் வயோதிகம் (தனது 30ஆம் வயதில்) காரணமாக அந்த குதிரை இறந்ததாக ஒரு சாரரின் கருதுகின்றனர். ஆனால் அந்த குதிரை இந்திய மன்னர் போரசுடன் ஏற்பட்ட யுத்ததில் கொல்லப்பட்டது என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று. குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia