புதுச்சத்திரம் (Puduchatram) என்பது இந்தியாவின் தமிழ்நாடின், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகம் ஆகும்.
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான நாமக்கலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1]
வரலாறு
இந்த ஊரின் பழைய பெயர் அன்னச்சத்திரம். இங்கு பயணிகள் தங்கி இருந்த அன்னசத்திரத்தில் உண்டு தங்கிவிட்டுச் செல்வர். சில காலத்துக்குப் பிறகு அந்தப் பெயர் புதுச்சத்திரம் என்று மாறிவிட்டது. இந்த கிராமம் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை 7 இல் அமைந்துள்ளது. தற்போது, இந்த கிராமம் நாமக்கல் மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. 24 மணி நேர பேருந்து வசதி, காவிரி ஆற்று நீர் வசதி, மருத்துவமனை, வங்கி, பள்ளி, கல்லூரி, சந்தை, கடைகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் இந்தப் பகுதியில் உள்ளன. புதுச்சத்திரத்திற்காக கண்ணூர்பட்டியில் தொடருந்து நிலையம் இயங்கிவருகிறது.
வேளாண்மை
இதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வேளாண்மை ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாகும். இந்தப் பகுதியில் பால் தொழில் ஒரு முக்கிய வணிகமாக உள்ளது.
அரசுத் துறைகள்
- அரசு மருத்துவமனை, புதுச்சத்திரம்
- கால்நடை மருத்துவமனை, புதுச்சத்திரம்
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம், புதுச்சத்திரம்
- காவல் நிலையம், புதுச்சத்திரம்
- போக்குவரத்து காவல் நிலையம், புதுச்சத்திரம்
- சார்ப் பதிவாளர் அலுவலகம், புதுச்சத்திரம்
- கிராம நிர்வாக அலுவலகம், புதுச்சத்திரம்
- வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
- வேளாண் அலுவலகம்
- அஞ்சல் அலுவலகம்
- மின் வாரிய அலுவலகம்
- தொலைபேசி பரிமாற்ற அலுவலகம்
- பால் கூட்டுறவு சங்கம்
- கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
- அரசு மருத்துவமனை
பள்ளிகளும் கல்லூரிகளும்
- அரசு தொடக்கப்பள்ளி, புதுச்சத்திரம்.
- அரசு மேல்நிலைப் பள்ளி, புதுச்சத்திரம்.
- ரெயின்போ மெட்ரிகுலேசன் பள்ளி, புதுச்சத்திரம்.
- விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி, புதுச்சத்திரம்.
- ஆர்.ஜி.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (ம) சர்வதேச சி.பி.எஸ்.இ பள்ளி, புதுச்சத்திரம்.
- பாவை வித்யாசிரமம் சிபிஎஸ்இ பள்ளி, புதுச்சத்திரம்.
- ஞானோதயா சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி, புதுச்சத்திரம்.
- பாவை பொறியியல் கல்லூரி
- பாவை பொறியியல் கல்லூரி
- பாவை பலதொழில்நுட்பக் கல்லூரி
- பாவை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி
- ரெயின்போ ஆசிரியர் பயிற்சிப் பள்ளி
- பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- பாவை மேலாண்மைக் கல்லூரி
- கணமணி தொழில்நுட்பக் கல்லூரி
- ஞானமணி பொறியியல் கல்லூரி
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆண்டகலூர் கேட்
அருகிலுள்ள நகரங்களும் சிறுநகரங்களும்
- சேலம், திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் .
- நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர்
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
- கொல்லி மலையை சங்க கால ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னர் ஆட்சி செய்தார். புதுச்சத்திரத்திலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள செம்மேட்டில் அவருக்கு ஒரு சிலை அமைந்துள்ளது.
- ஏற்காடு புதுச்சத்திரத்திலிருந்து 62.7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்