புதுச்சேரித் தலைமைத் தேர்தல் அலுவலர்
புதுச்சேரித் தலைமைத் தேர்தல் அலுவலர் (அ) புதுவைத் தலைமைத் தேர்தல் அலுவலர் இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதி பொதுத் தேர்தலாகிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை தனது மேற்பார்வையில் நடத்துவதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் இந்திய அரசியலமைப்பின் விதி 324 ன்படி மேலும் நாடாளுமன்றத்தில் 1950 ல் ஏற்படுத்தப்பெற்ற மக்கள் பிரநிதித்துவச் சட்டம், 1951,[1] குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் சட்டம்,1952 ஏற்படுத்தப் பெற்றதாகும். தலைமைத் தேர்தல் அலுவலர் அ அதிகாரி (சி.இ.ஒ.- மா.த.தே.அ)[1] இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால், ஆணையரால் நியமிக்கப்படுகின்றார். இவர்களின் பணி ஆட்சிப் பகுதியில் நடைபெற்கின்றத் தேர்தலை மேற்பார்வையிடுவது, வழிகாட்டுவது, கண்காணிப்பது மற்றும் கட்டுபடுத்துவது. புதுச்சேரியிலும் இவ்வலுவலரால் இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. தலைமைத் தேர்தல் அலுவலர் பொதுவாக இந்திய ஆட்சிப் பணிப் பட்டயம் பெற்றவர்களே அலுவலர்களாக நியமிக்கப்படுவர். புதுச்சேரியின் தலைமைத் தேர்தல் அலுவலராக திரு. எஸ். குமாராசாமி இ.ஆ.ப [2] தற்பொழுது பொறுப்பு வகிக்கின்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia